Ramanathapuram

News May 11, 2024

பரமக்குடியில் இடிதாக்கி ஒருவர் பலி

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று பெய்த கனமழையின் பொழுது கமுதக்குடி அருகே உள்ள சுந்தனந்தல் விளக்கு பகுதியில் சத்யராஜ் என்பவர் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது இடி மின்னல் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடல் பரமக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

News May 11, 2024

ராமநாதபுரம் மழைக்கு வாய்ப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.11) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

News May 11, 2024

தனியார் பள்ளி வாகனங்கள் செயல்பாடு: எஸ்பி ஆய்வு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கும் 549 தனியார் பள்ளி வாகனங்களின் செயல்பாடு குறித்து வட்டார போக்குவரத்து அலுவலகம், வருவாய், காவல் சார்பில் இன்று கூட்டாய்வு நடந்தது. எஸ்பி சந்தீஷ் ஆய்வு செய்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக் முஹமது, வாகன ஆய்வாளர்கள் செந்தில்குமார், பத்மபிரியா, முதன்மைக்கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்யராஜ், பள்ளி துணை ஆய்வாளர் ராமமூர்த்தி பங்கேற்றனர்.

News May 11, 2024

ராம்நாடு: தலைகுப்புற‌ கவிழ்ந்து விபத்து

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த டாடா ஏசி வாகனம் திடீரென நிலைதடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News May 11, 2024

ராம்நாடு: கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுணர்வை மேம்படுத்தும் வகையில் மாவட்ட காவல் துறையின் சார்பாக கிரிக்கெட் விளையாட்டு போட்டியானது ஆயுதப்படை மைதானத்தில் இன்று (மே 11) துவங்க இருந்தது. ஆனால் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 11, 2024

ஜூலை 2இல் துணைத் தேர்வு?

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

News May 10, 2024

ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

ராம்நாடு: 64 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 7,761 மாணவர்கள் 7,931 மாணவிகள் என 15,692 பேர் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் 7,372 மாணவர்கள், 7,749 மாணவிகள் என 15,121 பேர் தேர்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் உள்ள 138 அரசு பள்ளிகளில் 64 பள்ளிகள், அரசு உதவி பெறும் 49 பள்ளிகளில் 17 பள்ளிகள், 75 மெட்ரிக் பள்ளிகளில் 52 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்தன.

News May 10, 2024

ராம்நாடு: அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி

image

ராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரிப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்வு எழுதிய 76 மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்ததுடன் 495 மதிப்பெண் பெற்று ஒரு மாணவர் முதலிடத்தையும், 2 மாணவர்கள் 494 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடமும் பெற்றுள்ளனர். கணிதம் பாடத்தில் 20 பேர், அறிவியல் பாடத்தில் 11 பேர், சமூக அறிவியலில் 9 பேர் சதம் அடித்து சாதனை செய்துள்ளனர்.

News May 10, 2024

ராம்நாடு: 499 மார்க் எடுத்து மாணவி முதலிடம்

image

நடந்துமுடிந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 156 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் 8051 பேர், மாணவர்கள் 7986 பேர் என 16038 பேர் தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்நிலையில் கமுதி ரஹ்மானியா மெட்ரிக் பள்ளி மாணவி காவியா ஜனனி தமிழ் 99, மற்றவைகளில் 100 என மொத்தம் 499 மார்க் எடுத்து மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி என்ற பெருமையை பெற்றுள்ளார்.