India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை சென்னை, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் இடையே மையம் கொண்டுள்ளது. இதனால் கடலோர மாவட்டத்தில் சூறாவளியுடன் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த தொலை துார காற்றழுத்த தாழ்வுநிலை எச்சரிக்கையால் நேற்று முன்தினம் இரவு பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
தொண்டி புதுக்குடி கிராமத்தில் ஒரு வீட்டில் ஜெலட்டின் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தொண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று(டிச.21) தொண்டி போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டிற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
கமுதி அருகே கோரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ராமர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை முறையில் 15 ஏக்கர் பரப்பளவில் வாழை வெண்டை கத்தரி தக்காளி நெல் உள்ளிட்ட பயிர் வகைகளை கால்நடைகளின் சாணங்களை வயலில் உரம் இட்டு இயற்கையான முறையில் விவசாயப் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இயற்கை விவசாயி சாகுபடி முறைகளில் குறித்து ஜப்பான் நாட்டிலிருந்து 4 பேர் கொண்ட குழு நேரில் வந்து பார்வை மேற்கொண்டனர்.
இராமநாதபுரத்தில் ஜேம்ஸ்&கோ வின் 27ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 5 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் ஓவிய போட்டி “இராமநாதபுரத்தின் சிறப்பு” என்ற தலைப்பில் ஓவியம் வரைந்து ஜேம்ஸ் & கோ இராமநாதபுரம் கிளையில் டிச.27 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில், வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
தொண்டி பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுமிக்கு கடந்த15.9.2024-அன்று திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. சிறுமி அளித்த புகாரின் பேரில் கணவர் உள்பட 3பேர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் திருவாடானை மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இன்று (20.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களைச் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 27.12.2024 அன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள் குடும்பத்தை சார்ந்தோர் கோரிக்கை மனு (இரட்டைப் பிரதிகளுடன்) நேரில் அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில்: ராமேசுவரம் – ஹூப்ளி – ராமேசுவரம் சிறப்பு ரயில் டிசம்பா் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 2025 ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஹூப்ளி – ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் (07355)சனிக்கிழமை காலையில் ஹூப்ளியில் இருந்தும், ஞாயிற்றுகிழமை இரவு ராமேஸ்வரத்தில் இருந்தும் இயக்கப்படுகிறது. கூடுதல் நிறுத்தமாக சிவகங்கை அறிவிக்கப்பட்டுள்ளது
கடலூர் சங்கங்குடியை சேர்ந்தவர் சங்கீதா(38). இவரிடம் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக ராமநாதபுரம் வடக்கு தெரு முத்துராமலிங்கம்(60), காட்டூரணி ஓய்வுபெற்ற குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் கௌசல்யா(60) ஆகியோர் ரூ.17 லட்சம் வாங்கி மோசடி செய்துவிட்டனர். சங்கீதா புகாரின்படி ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் முத்துராமலிங்கத்தை கைது செய்தனர். கௌசல்யாவை தேடி வருகின்றனர்.
தாம்பரத்திலிருந்து ராமநாதபுரம் வரும் சிறப்பு ரயில் (வ.எண் : 06103) டிசம்பர் 26, 28 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும்ராமநாதபுரத்திலிருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் (வ.எண் : 06104) டிசம்பர் 27, 29 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே போக்குவரத்து பிரிவு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இதற்கு ஏற்ப பயண திட்டத்தை வகுத்து கொள்ளவும்.
Sorry, no posts matched your criteria.