Ramanathapuram

News May 18, 2024

ராம்நாடு: இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் நிறுவப்பட்டுள்ள ஸ்நேகா அறக்கட்டளை சார்பில் ராமநாதபுரத்தில் இயங்கும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய பயிற்சியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 31.05.24 ஆகும். மேலும் விவரங்களுக்கு https://www.iob.in/careers என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

News May 17, 2024

ராமநாதபுரம் : மழைக்கு வாய்ப்பு!

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் ராமநாதபுரத்தில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 17, 2024

ராமநாதபுரம்: மூன்று நாட்களுக்கு சூறைக்காற்று

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு (மே.17- 20) பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News May 17, 2024

ராமநாதபுரம் மழைப்பொழிவு விவரம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (மே.16) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பாம்பன் பகுதியில் 3 செ.மீட்டரும், தங்கச்சிமடத்தில் 2 செ.மீட்டரும், மண்டபம் பகுதியில் 1 செ.மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கு மழைப் பொழிவுஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News May 17, 2024

ராம்நாடு: ஆர்ப்பரிக்கும் வைகை… ஜாக்கிரதை

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆற்றுப்பாலம் அருகே அமைந்துள்ள தரைப்பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தால் சேதம் அடைந்தது. இந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பரமக்குடி வைகை ஆற்றிற்கு வந்தடைந்தது. இந்த நிலையில் ஆற்றுப்பாலம் அருகே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து வைகை தண்ணீர் சூழ்ந்து செல்கிறது.

News May 17, 2024

ராம்நாடு: 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று (மே 17) மதியம் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News May 17, 2024

ராம்நாடு: பாம்பனில் கொட்டி தீர்த்த மழை

image

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மே 14 முதல் கோடை மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ச்சியாகி உள்ளது. இந்நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகளவாக பாம்பன் 29 மிமீ, தங்கச்சிமடம் 18.60 மிமீ, மண்டபம் 11.80 மிமீ, வாலிநோக்கம் 5.60 மிமீ, ராமேஸ்வரம் 5.50 மிமீ மழை பொழிவு பதிவாகியுள்ளதாக பேரிடர் மேலாண் துறை தெரிவித்துள்ளது.

News May 17, 2024

ராம்நாடு: மக்களே இங்கு இன்று மின்தடை

image

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மின்பாதை பராமரிப்புப் பணி இன்று (மே 17) நடைபெற உள்ளது. இதனால் தீட்சிதர் கொல்லை, லட்சுமண தீர்த்தம், சீதா தீர்த்தம், அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை எதிர்புறம் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் திலகவதி நேற்று அறிவித்துள்ளார்.

News May 16, 2024

நாட்டுப்படகு மீனவர்கள் செல்ல தடை

image

நாளை (மே 17) முதல் கடலில் காற்று வேகம் மணிக்கு 40 முதல் 45 கிமீ, அதிகபட்சம் 55 கிமீ வரை வீசக்கூடும். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை நாட்டுப்படகு மீனவர்கள் தொழிலுக்கு செல்ல வேண்டாம். படகு வலைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ள வேண்டும் என மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

News May 16, 2024

பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல்

image

ராமநாதபுரம் நகராட்சி பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துத்துறையினர் இணைந்து முக்கிய இடங்களில் வெப்ப அலை முன்னேற்பாடு நடவடிக்கையாக புதிய, பழைய பேருந்து நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் தினமும் 20 லிட்டர் வீதம் பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ்.கரைசல் வழங்குகின்றனர். இதனை பருகி மக்கள் பயன்பெற நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.