India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரும் 9-ஆம் தேதி மாலை மதுரை வருகிறார். மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்யும் அவர் இரவு ராமேஸ்வரம் சென்று தங்கி மறுநாள் 10-ஆம் தேதி காலை ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் தனுஷ்கோடி செல்லும் ஆளுநர் ரவி மீண்டும் ராமேஸ்வரம் வந்து கார் மூலம் மதுரை சென்று சென்னை செல்கிறார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 13.11.2024 அன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அனைத்து துறை சார்ந்த துறை அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். விண்ணப்பங்களை WWW.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் (அ) மண்டல மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை இணை/துணை இயக்குனர்கள் அலுவலகத்தில் விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாகவோ நேரடியாகவோ நவ.,8-க்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொண்டி அருகே நம்புதாளையில் மணவெளி உறவு காரணமாக பரமக்குடியை சேர்ந்த முத்துக்குமார் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளி சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம்டிரைவர் கெல்வின் ராஜ் என்பவரை கைது செய்தனர். இதை தொடர்ந்து இன்று(நவ.,5) திருவாடானை பகுதியில் பதுங்கியிருந்த சிவகங்கை முத்துராஜா, திருவாடானை பாலகிருஷ்ணன், சொக்கு ஆகியோரை தொண்டி போலீசார் கைது செய்தனர்.
திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (நவ.,5) திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் GP.ராஜா தலைமையில் மதுரையில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா தலைமையில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நவ.9 காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இளையோர் திறன் தின விழா நடைபெற உள்ளது. திறன் மேம்பாட்டு 15 நிறுவனங்கள் பங்கேற்க உள்ள இவ்விழாவில் 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ படித்த ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
வண்டி எண் 06103 தாம்பரத்திலிருந்து ராமநாதபுரம் வரை வாரம் மும்முறை செல்லும் ரயில் சேவை மேலும் ஒரு மாதம் கால 30/11/24 வரை நீட்டிக்கப்படுகிறது அதன்ப்படி மறுமார்க்கமாக 06104 ராமநாதபுரத்திலிருந்து தாம்பரம் செல்லும் விரைவு ரயில் 01/12/24 வரை நீட்டிக்கப்படுகிறது தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இலங்கை போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் திருடி கடந்த 2020-ம் ஆண்டு தப்பி வந்து தனுஷ்கோடியில் இலங்கை போலீஸ்காரர் பிரதீப்குமார் பண்டாரா (34) கைதானார். திருச்சி முகாமில் தங்கி உள்ள இவர் மீதான வழக்கு ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் நேரில் ஆஜரான நிலையில் அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி குமரகுரு வழக்கினை வரும் 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கவும் சட்ட ஆலோசனைகள் வழங்கவும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18002021989,14566 ஆகிய தொலைபேசி எண்களில் அரசு விடுமுறை நாட்களில் நீங்களாக அலுவலக நேரங்களில் புகார்களை பதிவு செய்யலாம் என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இளஞ்செழியன் DSP தலைமையில் காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.