India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரூ.535 கோடியில் உருவான பாம்பன் ரயில் பாலம் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று, 2 மாதங்களுக்கு மேலாக திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது. புதிய ரயில் பாலம் இம்மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என பெரும் எதிர்பார்ப்பில் இருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது, பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தை ஏப்ரல்.6ல் பிரதமர் திறக்க உள்ளார் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் அறிவித்துள்ளார். *ஷேர்
இராமநாதபுரம், போகலுார் – 74029 07610, கடலாடி – 74029 07614, கமுதி – 74029 07613, மண்டபம் – 74029 07606, முதுகுளத்துார் – 74029 07612, நயினார்கோவில் – 74029 07611, பரமக்குடி – 74029 07609, ஆர்.எஸ்.மங்கலம் – 74029 07607, ராமநாதபுரம் – 74029 07604, திருப்புல்லாணி – 74029 07605, திருவாடாணை – 7402907608 எண்களுக்கு வாட்ஸ்ஆப் & 18004257040 எண்ணில் அடிப்படை தேவைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். *ஷேர்
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாக துறையின் மானிய கோரிக்கை விவாதத்தின் பதிலுரையில் அமைச்சர் கே.என் நேரு பேசினார். அப்பொழுது ராமேஸ்வரம் முதல்நிலை நகராட்சியை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தார். ரூ.4 கோடிக்கு மேல், ரூ.6 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை முதல் நிலை நகராட்சி, 10 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை தேர்வு நிலை நகராட்சியாக வகைப்படுத்தப்படுகின்றன. *ஷேர்
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச். 25) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
இராமநாதபுரம் சரக டிஐஜியாக பணியாற்றி வந்த அபினவ் குமார் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டு மதுரை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நெல்லை சரக டிஐஜியாக பதவி வகித்த மூர்த்தி ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டு இராமநாதபுரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழக உள்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
இராமநாதபுரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக இன்று(மார்ச்.25) தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என் நேரு இன்று அறிவித்தார். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக இருக்கும். மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் பகுதிகளுக்கு சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்டவைகள் உயரும் & 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் கருத்து என்ன?
கமுதி, கல்லுப்பட்டியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி கமலக்கண்ணன்(45). திருமணம் முடிந்து சுப்புலட்சுமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மாற்றுத்திறனாளியான கமலக்கண்ணன் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வந்தார். இதையடுத்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் இலவசமாக வீடு கட்டி கொடுக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. *ஷேர்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த லிபிஸ்டன் என்பவர் 16 மீனவர்களுடன் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று பாம்பன், தூத்துக்குடி இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது லிபிஸ்டன் படலில் உள்ள சுவிட்டை ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி மயக்கமடைந்தார். சக மீனவர்களை அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைத்து கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்தார்.
ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும். *இரவு வேலைக்கு செல்வோருக்கு ஷேர் செய்து உதவுங்கள்*
ராமேஸ்வரம், தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே இன்று(மார்ச்.24) தடை செய்யப்பட்ட பகுதியில் நீந்திய அமெரிக்க நாட்டு சுற்றுலா பயணியை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர். வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதால் சுற்றுலா பயணியின் நலனை கருத்தில் கொண்டு போலீசார் செயல்படுகின்றனர் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். *ஷேர்
Sorry, no posts matched your criteria.