Ramanathapuram

News November 11, 2024

கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது 

image

திருவாடானை தாலுகா நம்புதாளையில் கடந்த மாதம் பரமக்குடியை சேர்ந்த முத்துகுமார் என்ற ராட்டினம் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தொண்டி போலிசார் சிவகங்கை சரவணன் என்பவரை கைது செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிரைவர் உட்பட நான்கு பேரை கைது செய்தனர். மேலும் விசாரனையில் இன்று அஞ்சுகோட்டை கரையா கோட்டையை சேர்ந்த முருகன் மகன் வெற்றிவேல் (21) கைது செய்தனர்.

News November 11, 2024

பதிவில்லாத மறுவாழ்வு இல்லங்களுக்கு சீல்: ஆட்சியர் எச்சரிக்கை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள், முதியோர், மனவளர்ச்சி குன்றியோர், மன நலம் பாதித்தோர், பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகள், மாற்றுத்திறனாளிகள், போதை பொருட்களுக்கு அடிமையானோருக்கான மறுவாழ்வு இல்லங்கள் பதிவு, உரிமம் பெற இணைய தளம் PORTAL, அலுவலகம் மூலம் 1 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். தவறினால் இவ்வில்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News November 11, 2024

நிலம் வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

image

ராமநாதபுரம் அருகே உத்தரவை கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த கருத்தசாமி மகன் சங்குநாதன்(39) என்பவர் நிலம் வாங்கி தருவதாக ரூ.86 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தாராம். இது தொடர்பாக ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்குநாதனை கைது செய்தனர். இவர் பாரதி நகர் பகுதியில் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு காயில் சுற்றும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

News November 10, 2024

வாலிபரை வெட்டிய சம்பவத்தில் 6 பேர் மீது வழக்கு 

image

திருவாடானை குருந்தங்குடியை சேர்ந்தவர் சேதுராமன்.இவரை முன்விரோதம் காரணமாக அங்குள்ள டாஸ்மாக் கடை முன்பு ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இது தொடர்பாக திருவாடானை போலீசார் குருந்தங்குடி சூர்யா, சக்திவேல், ஊரணி கோட்டை அண்ணாதுரை, சிவானந்தம் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 10, 2024

கடல் நீர் புகாமலிருக்க தடுப்பு நடவடிக்கை

image

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி 1 ஆவது வார்டு மீனவர் நகரில் மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் கடல் நீர் தாழ்வான பகுதிகள் வழியாக ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதன்படி அப்பகுதியில் மணல் நிரப்பி தாழ்வான பகுதியின் மட்டம் உயர்த்தும் பணியை பேரூராட்சி தலைவர் ராஜா இன்று ஆய்வு செய்தார்.

News November 10, 2024

ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(நவ.10) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 10, 2024

ராமேஸ்வரம் மீனவர் 23 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை!

image

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று காலை தொழிலுக்கு சென்றன. அப்போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 மீனவர் 3 விசைப் படகுகளுடன் இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு அருகே இன்று(நவ.,10) காலை சிறைபிடித்துச் சென்றனர். அடிக்கடி சிறை பிடிக்கப்படும் இச்சம்பவத்தால் ராமேஸ்வரம் மீனவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

News November 9, 2024

ராமநாதபுரம் மாவட்ட இரவு நேர காவலர்கள் பணி அட்டவணை

image

இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை சீனிவாசன் DSP தலைமையில் காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News November 9, 2024

மீனவ வாரிசுகள் கப்பல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

image

தமிழக அரசால் கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் இந்திய கடலோர கப்பல் படை மற்றும் இந்திய கப்பல் படையில் சேருவதற்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர தகுதி உள்ள மீனவ வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் கடலோர பாதுகாப்பு குழுமம் கடற்கரை காவல் நிலையம், மீன்வளத் துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். *பகிரலாம்*SHARE*

News November 9, 2024

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் தற்போது விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படுகிறது.(அடங்கல் சான்று, கூட்டுறவு வங்கி கணக்கு புத்தகம், சிட்டா நகல், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, 4 பாஸ்போர்ட் போட்டோ ) ஆவணங்களுடன் விண்ணப்பித்து விவசாயிகள் பயிர்க்கடன் பெறலாம். இதில் கால தாமதம் ஏற்பட்டால் வட்டார அலுவலர்களிடம் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்