India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (மார்ச்.30) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் இன்றுடன் (மார்ச்.30) நிறைவு அடைகிறது. அதனை எடுத்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்கான பிறை இன்று (மார்ச்.30) பார்க்கப்பட்டது. மேகம் தெளிவாக இருந்ததால் முதல் பிறை தெரிந்ததை அடுத்து நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராமநாதபுரம் மாவட்ட அரசு ஹாஜி வெளியிட்டுள்ளார். எனவே நாளை (மார்ச்.31) இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட உள்ளனர்.
அனைத்து மாவட்டங்களிலும் முதல்வர் இளைஞர் விளையாட்டு மைதானக்கள் ரூ.19 கோடியில் அமைக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார். இதில் ராமநாதபுரம், சேலம் மாவட்டங்களில் சர்வதேச தரத்தில் செயற்கை தடகள் ஓடு பாதையுடன் இயற்கை கால்பந்து புல்தரை மைதானம் ரூ.25 கோடியில் அமைக்கப்பட உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
பரமக்குடி வட்டாரத்தில் பருத்தி, மிளகாய் பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்க ஏப்.3 அன்று பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள், வியாபாரிகள் இணைப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அப்பகுதி விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம். இது தொடர்பாக விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வேளாண் அலுவலர்களுக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராமசுப்பிரமணியன் சமூக பாதுகாப்பு திட்டத்தொகை வழங்குவதற்காக வங்கிக்கு தரப்படும் கமிஷன் குறித்து ஆய்வு செய்தார். அதில் கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக உள்ள செல்லப்பா(35) என்பவர் ரூ.60.97 லட்சம் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து செல்லப்பா, அவரது தந்தை மனோகரனை போலீசார் கைது செய்தனர்.
இன்று (மார். 29) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய செங்குத்து ரயில் பாலத்தை வருகிற ஏப்.06-ல் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார். ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்து ராமேஸ்வரத்திற்கு அடையாளமாக இருக்கும் முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் பெயரை புதிய ரயில் பாலத்திற்கு சூட்ட வேண்டுமென தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
அப்துல் கலாம் – முன்னாள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி. கமல்ஹாசன் – புகழ்பெற்ற நடிகர். விக்ரம் – புகழ்பெற்ற நடிகர். குலாம் ராசிக் – இலங்கை கிரிக்கெட் வீரர். வேல ராமமூர்த்தி – குணச்சித்திர நடிகர். ராஜ்கிரண் – பழம்பெரும் நடிகர். மாலினி ஜீவரத்தினம் – ஆவணப்பட இயக்குனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் – அரசியல் மற்றும் ஆன்மீகவாதி. தியாகி இமானுவேல் சேகரன் – ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய தலைவர்.
உலக தண்ணீர் தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளில் இன்று (மார்ச்.23) காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் உலக தண்ணீா் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் மக்கள் கலந்து கொள்ள ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அழைப்பு விடுத்துள்ளார்.
பாம்பனில் புதிய ரயில் பாலத்திற்கான திறப்பு விழா ஒத்திகை நாளை மார்ச்.29 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. எனவே அப்பகுதியில் படகுகள் பாலத்தை கடக்க வேண்டாம் எனவும் ஒத்திகை நடைபெறும் போது ஆற்றுப் பகுதியில் படகுகளை நிறுத்தி வைக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது மீன்வளத்துறை ரயில்வே மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.