India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ரூ.540 கோடியில் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் உள்ள புதிய பாம்பன் ரயில் பாலத்தின் ஆய்வை மேற்கொண்டபின் “இன்னும் ஒரு மாத காலத்திற்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். மேலும் ராமேஸ்வரம் புதிய ரயில்வே ஸ்டேஷன் 60 சதவீத பணிகள் நிறைவுடைந்துள்ளது ” என ரயில்வே தென்னக பொது மேலாளர் ஆர் என். சிங் ராமேஸ்வரத்தில் பேட்டி அளித்தார். மதுரை கோட்டப் பொறியாளர் உடன் இருந்தார்.
பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய செங்குத்து ரயில் தூக்கு பாலத்தை திறந்து வைக்க பிப்.28ஆம் தேதி பிரதமர் மோடி பாம்பன் வருகை தருவதாக அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது, இதற்கான ஏற்பாடுகளை தொடங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 48 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச்.3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
முதுகுளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ மற்றும் பால்வளம் மற்றும் கதர் தொழில் வாரியத் துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முதலமைச்சரின் பரிந்துரைப்படி கதிர் மட்டும் கிராமத் தொழில் வாரியத்தை அமைச்சர் பொன்முடியிடம் ஒப்படைக்கப்பட்டது. இனிமேல் பொன்முடி வனம் மற்றும் கதர் துறை அமைச்சராக இயங்குவார். அமைச்சர் ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராக இயங்குவார்.
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.,தலைவர் முரளிதரன் கூறுகையில், ராமநாதபுரம் அருகே புதிதாக கட்டப்பட்டிருக்கும் பா.ஜ., கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க, பிப்.26ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வருகிறார். அதேபோல, பிப்.28ல், பாம்பன் புதிய ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்பணிக்க பிரதமர் மோடி, ராமேஸ்வரம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது என்றார்.
நாளை (பிப்.14) காலை 10:30 மணிக்கு ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர் குறை தீர் நாள் கூட்டம் நாளை மாலை 3:30 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில்,விசைப்படகு, நாட்டுப்படகு, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயனடையலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் சற்று முன் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மேலக்கோட்டை விலக்கு சாலை அருகே அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கிலத்தின் உமிழ்நீரை கடத்திய 6 குற்றவாளிகளை இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவின்படி கைது செய்துள்ளனர். 4 கிலோ எடை கொண்ட திமிங்கலத்தின் உமிழ்நீர் சர்வதேச மதிப்பு சுமார் ரூ. 4 கோடி என மதிப்பிடப்படுகிறது.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி காலிபணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசிநாள் நாளை(பிப்.14). <<-1>>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணபிக்கவும் *பிறரும் பயன் பெற ஷேர் செய்யுங்கள்
இராமநாதபுரத்தில் வரும் (14/02/2025) அன்று காலை 10:30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மீனவ மக்களும் கலந்து கொண்டு தங்களின் குறைகளைத் தெரிவித்து அதற்கான தீர்வை பெற்றிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (12.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இராமநாதபுரம், கீழக்கரை, இராமேஸ்வரம், முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
Sorry, no posts matched your criteria.