Ramanathapuram

News September 13, 2024

ராம்நாடு: போலீசார் மீதான விசாரணை ஒத்திவைப்பு

image

மதுரை வெங்கடேசன் என்பவர் திருட்டு வழக்கு தொடர்பாக 2012ல் எமனேஸ்வரம் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார். அங்கு வைத்து போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறி வழக்குப் பதிவு செய்தனர். இதில் போலீசார் கிருஷ்ணவேல், ஞானசேகரன், கோதண்டராமன் ஆகிய 3 பேரும் நேற்று மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகினர். சாட்சிகள் விசாரணைக்கு பின் நீதிபதி (பொறுப்பு)) உத்தமராஜா வழக்கை வரும் 30-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

News September 12, 2024

சென்னை – ராமநாதபுரம் பண்டிகை கால சிறப்பு ரயில்கள்

image

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் – ராமநாதபுரம் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் செப்டம்பர் 19, 21, 23, 26, 28, 30 ஆகிய நாட்களில் தாம்பரத்திலிருந்து மாலை 05.00 மணிக்கும், செப்டம்பர் 20, 22, 24, 27, 29, அக்.1 நாட்களில் ராமநாதபுரத்திலிருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு இரவு 11.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 12, 2024

பாம்பன் புதிய பாலம் அக்டோபரில் திறப்பு.?

image

மண்டபம் – ராமேஸ்வரம் இடையே பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை வரும் அக்டோபர் 2ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், கடந்த 22 மாதங்களாக ராமேஸ்வரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் தொடங்க இருக்கிறது. முன்னதாக, அக்டோபரில் பாம்பன் புதிய பாலம் திறக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்திருந்தார்.

News September 12, 2024

இராமநாதபுரம் மாவட்டத்தில் 54 குழந்தை திருமணங்கள்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜனவரி முதல் இதுவரை குழந்தை திருமணம் தொடர்பாக 72 தொலைபேசி புகார்கள் வந்ததில் 54 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 15 திருமணங்கள் நடந்து முடிந்த பின்னர் தகவல் கிடைத்ததால் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்ததாக 8 குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News September 11, 2024

இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் உதயநிதி அஞ்சலி

image

தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜை விழா பரமக்குடியில் இன்று(செப்.11) நடைபெற்று வருகிறது. இதில் திமுக இளைஞரணி செயலாளரும் மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். உடன் பிற்படுத்தப்பட்ட துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

News September 11, 2024

அமைச்சர் உதயநிதிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு

image

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று (செ,11) தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள இன்று பரமக்குடிக்கு வருகை தந்த தமிழக விளையாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாருமான உதயநிதி ஸ்டாலினுக்கு இராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

News September 11, 2024

பரமக்குடியில் செல்வபெருந்தகை கண்டனம்

image

இம்மானுவேல் சேகரனார் குருபூஜை விழாவிற்கு இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பரமக்குடிக்கு வருகை தந்தார். அஞ்சலி செலுத்திய பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, குருபூஜைக்கு வரும் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. ராமநாடு காவல்துறை மிகவும் அலட்சியமாக செயல்படுகிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.

News September 11, 2024

பரமக்குடியில் நடந்த விபத்தில் 9 பேர் படுகாயம்

image

இமானுவேல் சேகரன் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக நாமக்கல்லில் இருந்து பரமக்குடிக்குச் சென்ற கார், சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியாது. நல்வாய்ப்பாக இவ்விபத்தில் 9 பேர் உயிர் தப்பினர். இதில் படையப்பா என்பவரின் 2 கால்களும் முறிந்த நிலையில் ஒரு கால் அகற்றப்பட்டது. மீதமுள்ள 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.. இது குறித்து பரமக்குடி போலீசார் விசாரக்கின்றனர்.

News September 11, 2024

பரமக்குடி வட்டாரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

image

இம்மானுவேல் சேகரனாரின் 67-வது குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைமுன்னிட்டு, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிலையில், பரமக்குடி வட்டாரத்தில் உள்ள 84 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News September 11, 2024

பரமக்குடியில் பொது போக்குவரத்தில் மாற்றம்

image

பரமக்குடியில் இன்று(செப்.10) தியாகி இமானுவேல் சேகரன் 67வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி அனைத்து அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் மரியாதை செலுத்த வருகை தருவர். இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை, ராமநாதபுரத்தில் இருந்து வரும் பேருந்துகள் நயினார் கோவில், இளையான்குடி, சிவகங்கை, மேலூர் வழியாக பரமக்குடிக்குள் வராமல் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.