India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமேஸ்வரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர், தனது பைபர் படகு கடந்த செப்., 11-ம் தேதி காணாமல் போனதாக புகார் அளித்தார். இப்படகு புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி கடல் பகுதிகளில் மர்மநபர் ஒருவர் இறந்த நிலையில் சென்றுள்ளது. அங்குள்ள மீனவர்கள் பத்திரமாக படகினை மீட்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இறந்த நபர் குறித்து ராமேஸ்வரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, திருவாடானை, கடலாடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் 10 இருக்கைகள் அமைக்கப்பட்டு குடும்ப நல வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்கு, வங்கி வாராக் கடன் வழக்கு, சிவில் என 4172 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டு 999 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 8 கோடியே 73 லட்சத்து 91 ஆயிரத்து 507 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டு வழக்காளர்களுக்கு வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 47 மையங்களில் 56 அறைகளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு இன்று(செப்.14) நடந்தது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்த 15,657 பேரில் 11,905 பேர் மட்டும் பங்கேற்றனர். கண்காணிப்பு அலுவலர்கள் 2 பேர் தலைமையில் 55 தேர்வு மைய பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டனர். 13 நடமாடும் கண்காணிப்பு குழு, 2 பறக்கும் படை குழு தேர்வு மையங்களை கண்காணித்தனர்.
இராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் இன்று(செப்.14) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி II/IIA (Group-II/IIA) முதல்நிலைத்தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேர்வர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கலை பண்பாட்டுத் துறை, ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் ராமநாதபுரம் DD விநாயகர் தொடக்கப் பள்ளியில் மாவட்ட அளவிலான 5-8, 9-12, 13-16 வயதிற்குட்பட்டோர் கலைப்போட்டிகள் இன்று காலை தொடங்கியது. ஆயிர வைசிய மகாசபை தலைவர் ஜெயராமன் தொடங்கி வைத்தார். பரதம், ஓவியம், பாட்டு, கிராமிய நடனப் போட்டியில் மாணாக்கர் பங்கேற்றனர். ஆசிரியர்கள் முனீஸ்வரி, அனந்தமுத்துமாரி, பாலாஜி, ஆகாஷ், தனசேகரன் போட்டிகளை நடத்தினர்.
ராமநாதபுரம் சேதுபதி அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி, செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் இன்று(14.09.24) TNPSC குரூப் 2, 2A தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்வு மையங்களான இக்கலூரிகளில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டார். உடன் அரசு அதிகார் இருந்தனர்.
ராமநாதபுரம் தமிழர் தேசம் கட்சி நிர்வாகியை கொலை செய்ய வந்த 4 பேரை முன்னதாக போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக எஸ்.மாரியூர் மாந்தா லோகேஷ் என்ற ரவுடியை தேடிவந்தனர். சமீபத்தில், 8 கிலோ கஞ்சாவுடன் அவர் ஆந்திராவில் கைதானார். தகவலறிந்த ராமநாதபுரம் போலீசார் அங்கு சென்று, இங்குள்ள 3 வழக்கிற்காக மாந்தா லோகேசை கைது செய்து ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் நேற்று ஆந்திரா சிறையில் அடைத்தனர்.
ராமநாதபுரம் அருகே சத்திரக்குடியில், A4 பேப்பரில் ரூ.100 Xerox அடித்து எடுத்துச் சென்ற இளைஞர் கார்த்திக்(25) என்பவர் நேற்று(செப்.13) போலீசாரால் கைது செய்யப்பட்டார். மொத்தம் இவரிடம் எழுபத்தெட்டு A4 பேப்பர்களில் நான்கு 100 ரூபாய் என ரூ.31,200 Xerox அடித்துள்ளார். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் வக்கீல் குமரன் தாக்கப்பட்டதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட நபரை பிடித்து ஒப்படைத்தும் கைது செய்யாமல் தப்பிக்க விட்ட அண்ணா நகர் போலீசாரை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தினை உடனடியாக அமல்படுத்த கோரி ராமநாதபுரத்தில் வக்கீல்கள் இன்று(செப்.13) கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வழக்கமான கோர்ட் பணிகள் பாதிக்கப்பட்டன.
ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன் ஜீத் காலொன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ராமநாதபுரம மாவட்டத்தில், விவசாயிகள் பெரும்பாலும் டி.ஏ.பி உரத்தை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், டி.ஏ.பி உற்பத்தி குறைந்து, விலை மிகவும் உயர்ந்து காணப்படுகிறது. எனவே, டி.ஏ.பி-க்கு பதிலாக சூப்பர் பாஸ்பேட், என்.பி.கே. காம்ப்ளக்ஸ் உரத்தை பயன்படுத்தலாம்” என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.