India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெருநாழி அருகேயுள்ள துத்திநத்தம் விலக்கு சாலையில் பெருநாழி போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெருநாழியிலிருந்து வந்த யுனோவா காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் காருக்குள் அரிவாள், பெப்பர் ஸ்பிரே, உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது மேலும் பெருநாழி பகுதியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட வந்ததாக காரில் இருந்த இளைஞர்கள் வாக்கு மூலம் கொடுத்ததை தொடர்ந்து 12 பேரை போலீசார் கைது செய்தனர்
திருச்சி ரயில் நிலையம் அருகே நேற்று(செப்.17) நள்ளிரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த சேது எக்ஸ்பிரஸின் கடைசி 3 பெட்டிகள் கழண்டு சென்றதால் பயணிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் கழண்ட பெட்டிகளை மீண்டும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொருத்தி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் விசாரணை மேற்கொண்டுள்ளது
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாலிநோக்கம் உப்பூர் திருப்புல்லாணி தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் கோடை காலம் தொடங்கி பருவமழைக்கு முன்னதாக உப்பு உற்பத்தி நடைபெறும். இந்நிலையில் கோடைகாலம் முடிந்து 3 மாதங்களாகியும் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மாவட்டம் முழுவதும் மீண்டும் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. பருவமழை தொடங்க உள்ளதால் பாத்திகளில் உப்பை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து சென்றபோது மண்டபத்திற்கும் தொண்டிக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் வந்த படகினை சோதனை செய்தனர். அந்த படகில் இருந்த 3 பேரும் இலங்கை யாழ்ப்பாணம் தாலையடி பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வாலிநோக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மீரான் முகைதீன், 42. இன்றிரவு இவர் டூவீலரில் கீழக்கரையில் இருந்து வாலிநோக்கம் திரும்பினார். கீழக்கரை தாலுகா அலுவலகம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த அரசு டவுன் பஸ் டூவீலர் மீது மோதியதில் மீரான் முகைதீன் இறந்தார். கீழக்கரை போலீசார் அவரது உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள DEO, டிரைவர், கிளீனர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 41 பணியிடங்கள் உள்ள இந்த பணிக்கு 10, 12, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை இணையத்தில் பதிவிறக்கம் செய்து வரும் 24ஆம் தேதிக்குள் இராமநாதபுரம் மாவட்ட சுகாதார அலுவலருக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மண்டபம் -கடலூர் மாதாந்திர ரயில் சோதனை ஓட்டம் இன்று (செப்.17) நடைபெற இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 6:30 மணியளவில் காரைக்குடி ரயில் நிலையத்தில் புறப்படும் ஆய்வு ரயில் மண்டபம் நிலையத்திற்கு காலை 08:30 மணிக்கு வந்தடைகிறது. மீண்டும் காலை 9:30 மணியளவில் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, மயிலாடுதுறை வழியாக கடலூர் ரயில் நிலையத்திற்கு சென்றடைகிறது.
இராமநாதபுரத்தில் இன்று செய்தியாரிடம் பேசிய பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம், விசிக தலைவர் திருமாவளவன் வரும் தேர்தலில் திமுகவிடம் அதிக சீட்டுகளைப் பெறவே மது ஒழிப்பு நாடகத்தை நடத்தி வருகிறார். மது ஒழிக்கப்பட வேண்டும் என அவர் உண்மையில் நினைத்தால் திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும். இந்நேரம் திமுகவினர் நடத்தி வரும் மது ஆலைகள் முன் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும் என குற்றம் சாட்டினார்.
இராமேஸ்வரத்தில் கடந்த இரண்டு நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில் நேற்று(செப்.15) ஏராளமான பக்தர்கள் புனித நீராடி 21 புன்னிய தீர்த்தங்களில் நீராட நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி தரிசனம் செய்தனர்.
ராமேஸ்வரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர், தனது பைபர் படகு கடந்த செப்., 11-ம் தேதி காணாமல் போனதாக புகார் அளித்தார். இப்படகு புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி கடல் பகுதிகளில் மர்மநபர் ஒருவர் இறந்த நிலையில் சென்றுள்ளது. அங்குள்ள மீனவர்கள் பத்திரமாக படகினை மீட்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இறந்த நபர் குறித்து ராமேஸ்வரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.