Ramanathapuram

News November 15, 2024

500 கிலோ காய்கறி அலங்காரத்தில் காட்சியளித்த முத்தாலம்மன்

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் காவல் தெய்வமான ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு இன்று அண்ணா அபிஷேக விழாவை முன்னிட்டு 500 கிலோ எடை கொண்ட காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் பின்பு அம்மனுக்கு மகா தீபாரதனை கட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் காய்கறி அலங்காரத்தில் வீற்றிருந்த முத்தாலம்மனை வழங்கி சென்றனர்.

News November 15, 2024

நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,374 வாக்குச் சாவடிகளிலும் நவ. 16,17, 23, 24 ல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். 2025 ஜன.1ல் 18 வயது நிரம்பியோர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (https://www.nvsp.in) (அல்லது) கைபேசி செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.

News November 15, 2024

மின்சாரம் தாக்கியதில் வாலிபர் உயிரிழப்பு

image

ராமேஸ்வரத்தில் நேற்று நடந்த திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு வரவேற்பு பிளக்ஸ் போர்டு, கட்சி கொடி கட்டப்பட்டிருந்தன. விழா முடிந்து இரவு வரை அகற்றப்படாமல் இருந்த கட்சி கொடி அருகே நேற்றிரவு நிறுத்திய சரக்கு வாகன கதவை மீன் கம்பெனி பணியாளர் கோபி கிருஷ்ணன் (27) திறந்து கீழே இறங்கினார். கதவு கொடி கம்பத்தை உரசி அருகிலிருந்த டிரான்ஸ்பார்மர் விழுந்தபோது கோபி கிருஷ்ணன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

News November 15, 2024

இராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(நவ.15) 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 10 மணிக்குள் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2024

தொழில் கடன் பெறுவர்களுக்கான சிறப்பு முகாம்

image

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் பரமக்குடி மக்கள், வியாபாரிகளுக்கு உணவு மதிப்பு கூட்டுதல் தொடர்பான தொழில் தொடங்க, தொழில் விரிவுபடுத்த 35 சதவீதம் அரசு மானியத்துடன் கூடிய pmfme திட்டத்தில் 1 லட்சம் முதல் 30 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கான சிறப்பு முகாம் நாளை(15.11.24) பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட வள அலுவலர் தெரிவித்துள்ளார்

News November 14, 2024

ராமநாதபுரம்: 66 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை குழந்தை திருமணம் தொடர்பாக 90 தொலைபேசி புகார்கள் வந்துள்ளன. உடனடி நடவடிக்கையின் அடிப்படையில் 66 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 18 திருமணங்கள் நடந்து முடிந்த பின்னர் தகவல் கிடைத்ததால் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்ததாக 9 குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News November 14, 2024

ராம்நாட்டில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

image

102 தாய் சேய் நல பிரிவு மற்றும் 108 ஆம்புலன்சில் பணிபுரிய ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம் நாளை(நவ.15) அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது. தகுதி வாய்ந்த நபர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 044-28888060 எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News November 14, 2024

ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 பேருக்கு டெங்கு பாதிப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்த மழை நீரில் டெங்கு கொசுக்கள் பெருகி பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ராமநாதபுரம் சுகாதார மாவட்டத்தில் சிறுவன் சிறுமி உள்பட 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

News November 13, 2024

மக்கள் தொடர்பு திட்டம் முகாம்

image

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூர் பிர்காவுக்கு உட்பட்ட திருத்தேர்வளையில் நாளை ( நவ.14) கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற உள்ளது. எனவே திருத்தேர்வளை, ஆனந்துார், ஆயங்குடி, கீழக்கோட்டை, கப்பகுடி, கரவளத்தி, நாடார் கோட்டை, பொட்டக்காடு மற்றும் சுற்றுப்புற பகுதி கிராம மக்கள் திருத்தேர்வளை சமுதாய கூடத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் முகாமில் பங்கேற்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News November 13, 2024

புள்ளியியல் கையேட்டை வெளியிட்ட ஆட்சியர்

image

இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் புள்ளியியல் துறை வடிவமைத்த மாவட்ட அரசு அலுவலங்களின் தகவல் அடங்கிய புள்ளியியல் கையேட்டை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டார். இக்கையேட்டில் மாவட்ட மக்கள் தொகை, வேளாண்மை, நீர்பாசனம், கால்நடை பராமரிப்பு, மின்சாரம், சுகாதாரம், கல்வி, மீன்வளம், தொலை தொடர்பு, உள்ளாட்சி, போக்குவரத்து, மாவட்ட வருவாய் மற்றும் அனைத்துத்துறை அலுவலகங்களின் தரவுகள் உள்ளது.