India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெளியுறவுத்துறை நாடாளுமன்ற நிலைக்குழு சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக கேரளா மாநிலத்தில் நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது கொச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் RPO மற்றும் பாஸ்போர்ட் சேவை மையம் PSK உள்ளிட்டவைகளை நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பார்வையிட்டனர். இதில், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் நவாஸ்கனி கலந்து கொண்டார்.
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று (ஏப்.23) நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விழுப்புரம் – ராமேஸ்வரம் இடையே பகல்நேர அதிவேக சிறப்பு ரயில் வாரத்தில் 4 நாள்கள் இயக்கப்பட உள்ளது. மே 2 தேதி முதல் ஜூன் 30 வரை, வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி என 4 நாட்கள் இயங்குது. ராமநாதபுரம், மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம் ஆகிய பகுதிகளில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இதை ரயில் பயணம் செய்யும் நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க
ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 84 பணியாளர், 3 குறு அங்கன்வாடி பணியாளர், 38 உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் <
இராமேஸ்வரம் எம்.ஆர்.டி நகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(47). இராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்று விட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது தங்கச்சிமடம் அருகே நேற்று அதிகாலை தூக்க கலக்கத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். காயமடைந்த இருவரை மீட்ட போலீசார் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் இன்று (ஏப்.22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்கள் வெளியிட்டுள்ளனர். இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.
இராமநாதபுரம் – செகந்திராபாத் இடையே இயங்கி வரும் சிறப்பு ரயில் நாளை (ஏப்.23) முதல் இராமேஸ்வரம் வரை நீட்டித்து இயங்க இருக்கிறது. மேலும் வரும் மே மாதம் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வழி – நல்கொண்டா, குண்டூர், ஓங்கோல், நெல்லூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம் பல இடங்களில் சிவகங்கை, மானாமதுரை இராமநாதபுரம், இராமேஸ்வரம் வரை நீட்டித்துள்ளனர்.
கோடை விடுமுறை துவங்கியதால் தொண்டி கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மீன்பிடி படகுகளில் சில மீனவர்கள் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக பெற்றுக் கொண்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். ஒரு படகில் 20-க்கும் மேற்பட்டோர் செல்வதால் ஆபத்து ஏற்படுகிறது. இதனால் மரைன் காவல்துறையினர் சுற்றுலா பயணிகளை படகில் ஏற்றிச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை “1800 599 1500” இந்த கட்டணமில்லா இலவச நமபரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என அரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE
இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதாந்திர தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25-04-2025 அன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் 20 முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இம்முகாமில் 10th, 12th, ITI, Degree ஆகிய கல்வித் தகுதி உடைய வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம், <
Sorry, no posts matched your criteria.