India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட திமுக தலைமையிலான இந்திய கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அமைச்சர் ராஜகண்ணப்பன், திமுக மாவட்ட செயலர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, சட்டமன்ற உறுப்பினர்கள் முருகேசன், ராம.கருமாணிக்கம் உடனிருந்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் சாலையில் வழிநெடுகிலும் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செல்வவிநாயகர் ஆலயத்தில் வேட்பு மனுவை பூஜை செய்து தரிசனம் செய்தார். தொடர்ந்து படிவத்தில் அங்கேயே கையெழுத்திட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம், சாயல்குடி அருகே இதம்பாடல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திமுக, அமமுக கட்சியினர் மற்றும் ஓபிஎஸ் அணி ஆதரவாளர்கள்
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி, அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா ஆகியோர் முன்னிலையில்
அதிமுகவில் நேற்று மாலை இணைந்தனர். அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் வெற்றிக்கு உழைப்பதென உறுதி ஏற்றனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக கீழக்காஞ்சிரங்குளம், எட்டிச்சேரி, கடமங்குளம், ஆத்திகுளம், நல்லூர், கீரனூர், வைத்தியனேந்தல் ஆகிய பகுதிகளில் அமமுக முதுகுளத்தூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் முருகன் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு பாஜக வுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தனி சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் நாளை நண்பகல் 12 மணி அளவில் தனது ஆதரவாளர்கள், கூட்டணி கட்சியனருடன் சென்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணு சந்திரனிடம் தனு வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். டி பிளாக் ஆர்.ஆர்.டவர் முன்பு இருந்து காலை ஊர்வலமாக சென்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணு சந்திரனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தேர்தல் பணிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, ராமநாதபுரத்தில் மருத்துவர் சந்திர பிரபா ஜெயபால் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024 முன்னிட்டு, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, ராமநாதபுரம் மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற பகுதிகளில் இன்று (23.03.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் வாக்குப்பதிவு மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ராமநாதபுரம் அருகே பாம்பன், குந்துகால் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக கஞ்சா கடத்தல் நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் ராமேஸ்வரம் தீவு பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தி சென்று கிளிநொச்சி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கஞ்சா பொட்டலங்களை இலங்கை கடற்படை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றது.
Sorry, no posts matched your criteria.