India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று (மார்ச் 22) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்தத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படலாம். எனவே அதற்கு மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் நேற்று (மார்ச் 21) ராமநாதபுரம் வருகைபுரிந்தார். அவருக்கு மாவட்ட எல்லையில் மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமையில் வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் கே.ஆர்.சுரேஷ் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, மணிகண்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
வரும் மக்களவை தேர்தலில் ராமநாதபுர நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இவர் பாஜக கூட்டணியில் இடம் பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதில் எங்களின் தொண்டர் பலத்தை நிருபிப்போம் எனவும் சூளுரைத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நிலைக்குழு கீழக்கரை தனி வட்டாட்சியர் ராமமூர்த்தி, சிறப்பு எஸ்ஐ வேல்முருகன் உள்ளிட்டோர் உச்சிப்புளி பருந்து விமான தளம் அருகே இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து தனியார் ஏலச்சீட்டு நிறுவன ஊழியர்கள் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.12.15 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இத்தொகையை வருமான வரி துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
தமிழகம், புதுவையில் எம்பி தேர்தல் ஏப்.19இல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றன. அந்த வகையில், கூட்டணியே அமைக்காமல் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியலை மார்ச் 23ஆம் தேதி சீமான் வெளியிடுவார். அதன்படி ராம்நாடு தொகுதி வேட்பாளராக மருத்துவர் சந்திரபிரபா அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மரக்குளம் சுந்தரபாண்டி மகன் பாலமுருகன் (28), விருதுநகர் மாவட்டம் அம்மன்பட்டி வெற்றிவேல் மகன் விக்னேஸ்வரன் (26), முதுகுளத்தூர் மூலக்கரைபட்டி கிருஷ்ணன் மகன் மலை கண்ணன் (26). இவர்கள் 3 பேரும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததை ஒட்டி இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சந்தீஷ் பரிந்துரையின்பேரில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேற்று அதற்கான உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த மூன்று மணி நேரத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்தத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதனால் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் அதற்கான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் கொளுத்திவரும் நிலையில் இந்த மழை குளுமையான சூழலை ஏற்படுத்தும்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனி போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நாளை கேணிக்கரையில் உள்ள தனியார் மஹாலில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் அறிவித்துள்ளார்.
கீழக்கரையை சேர்ந்த ஷியாம் பிரகாஷ் என்பவர் ஏர்வாடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட தனது நகையை திருப்புவதற்காக இன்று ரூ.5லட்சத்தை எடுத்துக் கொண்டு ஏர்வாடிக்கு காரில் சென்றார். அப்போது அந்தப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் சோதனையிட்டதில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, ராமநாதபுரம் எம்பி தொகுதியின் வேட்பாளராக விருதுநகர் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் பா.ஜெயபெருமாள் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.