Ramanathapuram

News October 13, 2024

இராமநாதபுரம்: உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

image

ராம்நாடு எம்பி நவாஸ்கனி உயர்கல்வி பயிலும் 700க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா வருகிற (அக்.19) கேணிக்கரை யாஃபா மஹாலில் நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக மதுரை எம்.பி வெங்கடேசன் தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு கல்வி உதவித்தொகை வழங்குகின்றனர்.

News October 13, 2024

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை திரு. சபரிநாதன் DSP தலைமையில் காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News October 12, 2024

எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற முன்னாள் எம்எல்ஏ

image

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டியன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அதிமுகவில் அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் இன்று (அக்-12) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News October 12, 2024

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (அக்.12) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 12, 2024

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று கனமழை

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (அக்.12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மழையால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன் பாதுகாப்புடன் செல்வது நல்லது. SHARE IT.

News October 12, 2024

பாம்பன் புதிய பாலத்தை கூடுதல் பொது மேலாளர் ஆய்வு

image

பாம்பன் பழைய பாலம் பழுதடைந்ததால் புதிய பாலம் அமைக்கும் பணிகள் 2020ல் ரூ.550 கோடியில் தொடங்கியது. நவீன தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்ட செங்குத்து துாக்குப்பாலம் பணிகள் நிறைவு பெற்று சமீபத்தில் சோதனை நடந்தது. இந்த பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதனையொட்டி பாலப்பணிகளை தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் வரும் 14ஆம் தேதி ஆய்வு செய்ய உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 12, 2024

முதுகுளத்தூர் பேரூராட்சி தண்ணீரில் கழிவுநீர்

image

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சியில் உள்ள செல்லி அம்மன் கோவில் 2வது தெருவில் கடந்த ஒரு வாரமாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தினமும் திறந்துவிடும் தண்ணீரில் கழிவுநீர் கலந்து வருவதால் இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொது மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் பேரூராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News October 11, 2024

17 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கையில் இருந்து விடுவிப்பு

image

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 17 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. ஆனால் இலங்கை மதிப்பு தல ஒரு நபருக்கு ரூ.50,000 விதம் பணம் செலுத்தினால் மட்டுமே விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் MLA முத்துராமலிங்கம் காதர் பாட்ஷா ரூ.2.5 லட்சத்தை மீனவர்கள் சார்பில் செலுத்தினார்.

News October 11, 2024

கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகள் குறித்து மக்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ள TN-ALERT என்ற செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலிவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1077 என்ற கட்டணமில்லா எண்ணில் மக்கள் தொடர்பு கொண்டு பருவ மழை தொடர்பான புகார்களை அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 11, 2024

பாம்பன் ரயில் புதிய பாலத்தில் அக்.14ல் ஆய்வு

image

பாம்பன் ரயில் புதிய பாலத்தின் முற்றிலும் நிறைவடைந்துள்ளன. இதை தொடர்ந்து இப்பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்குவது தொடர்பாக மையப்பாலத்தின் உறுதித் தன்மை குறித்து, தெற்கு ரயில்வே வாரிய பல்வேறு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்பாலத்தில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் அக்.14ல் ஆய்வு செய்ய உள்ளதாக செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.