India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமேஸ்வரத்தை சேர்ந்த 2 படகுகள், அதிலிருந்த மீனவர் 7 பேரை மன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை மார்ச் 21 அதிகாலை கைதுசெய்தது. மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர் 7 பேரையும் இன்று (மார்ச் 28) வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மீனவர் 7 பேரையும் நிபந்தனையுடன் நீதிபதி லத்தீப் விடுவித்து உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தலில் போட்டியிட 42 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் அதிமுக, இந்திய கூட்டணி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், நாதக & 3 சுயேச்சை உள்பட 7 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டன. ஏனைய மனுக்கள் மீது தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகின்றார். இந்த நிலையில் பல்வேறு கட்சியை சார்ந்த நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்து புரட்சி முன்னணியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ஹரிதாஸ் சர்மா நேற்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை சந்தித்து சால்வை அணிவித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் 25ஆம் தேதி பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன், இ.யூ.மு.லீக் வேட்பாளர் நவாஸ் கனி, திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி உள்ளிட்டோர் மீது கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி சந்தீஷ் தலைமையில் நேற்று மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ஏடிஎஸ்பி அருண் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி மாவட்டத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.
ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவரின் பெயர் ஒற்றுமையைப் பயன்படுத்தி நேற்று 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று பரமக்குடி தாலுகா கங்கைகொண்டான் மலையாண்டி மகன் பன்னீர்செல்வம் (75) என்பவர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். ஆக மொத்தம் ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் மொத்தம் 6 பேர் களத்தில் உள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது-பார்வையாளர் பண்டாரி யாதவ் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு அறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு ஆகியோர் இருந்தனர்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளராக பண்டாரியாதவ் நியமனம் செய்யப்பட்டு, ராமநாதபுரம் விருந்தினர் மாளிகை அறை எண் 1இல் தங்கி பணியாற்றிவருகிறார். தொகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் (ம) வாக்காளர்கள் தங்களது கோரிக்கைகள் (ம) புகார்களை தினசரி காலை 10 மணிமுதல் 11 மணி வரை நேரிலோ (அ) 9361541271, 04567-230416 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
தொண்டி: திருநகர் பகுதியில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தொண்டி போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசார் அடையாளம் தெரியாத சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த முதியவர் குறித்து விசாரணை நடத்தினர்.
தேவிபட்டினம் பழங்கோட்டை தெருவை சேர்ந்தவர் அன்பு பகுர்தீன் என்பவரின் மகன் சேக்தாவூத் (38). இவரது வீட்டில் என்ஐஏ பிரிவு டிஎஸ்பி முருகன் தலைமையிலான போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சேக்தாவூத் மற்றும் அவரின் தந்தை அன்பு பகுர்தீன் வீடுகளில் நடத்தப்பட்டுவரும் இந்த சோதனை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sorry, no posts matched your criteria.