India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான நகைகள் மாயமாகியுள்ளன. இதனையறிந்த சமஸ்தான தேவஸ்தானத்தின் திவான், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் தீவீர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவில் நகை மாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைப் போராட்ட வீரர் இராமநாதபுரம் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் 264வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் MA.முனியசாமி தலைமையில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பா.ஜெயப் பெருமாள் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் பா.ஜெயபெருமாள், அதிமுக நிர்வாகிகளுடன் ரெகுநாதபுரம் வல்லபாய் ஐயப்பன் திருக்கோயிலில் இன்று வழிபாடு செய்த பின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பதற்கான பிரச்சார பயணத்தை கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து துவங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.
ராமநாதபுரம், திருவாடானை தாலுகா சோளியக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு சொந்தமான கருவாட்டு கம்பெனியில் நேற்று(மார்ச் 29) இரவு திடீரென தீ பற்றியுள்ளது. தகவல் அறிந்த திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான குழுவினர், விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேர போராட்டத்திறகு பின் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.
ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ராமநாதபுரம் சட்டமன்றத்திற்குட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக, அமமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மண்டலமாணிக்கம் ஊராட்சிக்குள்பட்ட கோடாங்கிபட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அந்த கிராம மக்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து கமுதி வட்டாட்சியர் சேதுராமன், காவல் ஆய்வாளர் குருநாதன், விஏஒ பாண்டி, தனிபிரிவு உதவி ஆய்வாளர் முத்துசாமி உள்ளிட்டோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டப்படாததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
திருவாடானை தாலுகா காரங்காடு மற்றும் நம்புதாளையில் இன்று திருவாடனை சட்டமன்ற தொகுதியில் தாசில்தார் ஸ்ரீதர் மாணிக்கம் தலைமையிலான சப் -இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் பறக்கும் படையினர் தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஊனப்பட்டிருந்த தி.மு.க. கொடிக்கம்பங்களை அதிரடியாக அகற்றினர்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நவாஸ்கனி பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களை சந்தித்து ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் காரங்காடு கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்கப்படும் என்றும் மின் பற்றாக்குறை சரி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளர் மார்ச்.25ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது தேர்தல் நடத்தை விதிகளை அதிமுகவினர் மீறியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஜெயபெருமாள், மாவட்ட அதிமுக செயலர் முனியசாமி உட்பட 150 பேர் மீது போலீசார் நேற்று மதியம் வழக்கு பதிந்தனர்.
ராமநாதபுரம் முன்னாள் எம்.பி ரித்தீஷின் சகோதரர் மணி, நயினார்கோவில் ஒன்றிய பாஜக செயலர் கார்த்திக் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலர் முனியசாமி தலைமையில், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாள் முன்னிலையில் அதிமுகவில் நேற்று இணைந்தனர். நயினார் கோயில் வடக்கு ஒன்றிய அதிமுக செயலர் குப்புசாமி ஏற்பாடு செய்தார்.
Sorry, no posts matched your criteria.