Ramanathapuram

News April 3, 2024

‘நிரந்தர தீர்வு காண்பேன்’ – ஓபிஎஸ் உறுதி

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக ஆதரவோடு போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திருவாடானை யூனியன் சி.கே. மங்களம், மங்களக்குடி, ஆண்டாவூரணி, வெள்ளையபுரம், ஓரியூர், பாண்டு குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திறந்தவெளி வேனில் நின்று பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது ராமநாதபுரம் தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பேன் என்றும் தெரிவித்தார்.

News April 3, 2024

ராமநாதபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக நல்ல மழை பெய்துவருகிறது. இந்த நிலையில் இன்று மதியம் 1 மணிக்குள் (அடுத்த 3 மணி நேரத்தில்) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News April 3, 2024

பிரபல நடிகர் மீதான மோசடி வழக்கு ஒத்திவைப்பு

image

தேவிபட்டினம் முனியசாமி என்பவரிடம் அவரின் தொழிலை மேம்படுத்த ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆவண செலவாக ரூ.14 லட்சம் வாங்கினாராம். கடன் வாங்கி தராமல் தான் வாங்கிய பணத்திற்காக போலி செக் கொடுத்து ஏமாற்றியதாக ராமநாதபுரம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு நேற்று பவர்ஸ்டார் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி வழக்கினை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

News April 2, 2024

ராமநாதபுரம்: மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 2, 2024

அமைச்சர் ராஜகண்ணப்பன் தீவிர பிரசாரம்

image

முதுகுளத்தூர் தொகுதி தேரிருவேலி, கடம்போடை உள்ளிட்ட கிராமங்களில் இந்திய கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனிக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் வாக்கு சேகரித்து இன்று பிரசாரம் செய்தார். மகளிர் உரிமைத்தொகை, புதுமைப் பெண் கல்வி உதவித்திட்டம், அரசு பேருந்துகளில் கட்டணமின்றி மகளிர் பயணம் உள்ளிட்ட திட்ட பயன்கள் குறித்து அமைச்சர் பேசினார். காதர்பாட்ஷா பாட்ஷா முத்துராமலிங்கம் எம் எல்ஏ உள்பட பலர் உடன் சென்றனர்

News April 2, 2024

ராம்நாடு: கூட்டு பாலியல் வழக்கில் 5 பேர் ஆஜர்

image

பரமக்குடியில் 9ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி 3வது வார்டு கவுன்சிலர் சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், ராஜாமுகமது, தரகர்கள் உமா, கயல்விழி ஆகியோரை கைதுசெய்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், ராமநாதபுரம் கூடுதல் மகளிர் கோர்ட்டில் 5 பேரும் நேற்று ஆஜரான நிலையில் வரும் 8ஆம் தேதிக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

News April 2, 2024

ராம்நாடு: பிரச்சார அலுவலகம் திறந்து வைத்த வேட்பாளர்

image

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட புது மடத்தில் SDPI – அஇஅதிமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் நேற்று (ஏப்ரல் 1) திறக்கப்பட்டது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பா.ஜெயப்பெருமாள் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் SDPI கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டார்.

News April 1, 2024

ராமநாதபுரம் அருகே மது அருந்திய தொழிலாளி சாவு!

image

ராமநாதபுரம் மாவட்டம் காரேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம் மகன் பாண்டி (45), இவர் ராமநாதபுரத்தில் உள்ள மதுபான பாரில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு மது அருந்தி விட்டு குடி போதையில் நயினார் கோயில் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே படுத்து தூங்கி உள்ள நிலையில் இறந்துள்ளார். அவரது மனைவி கிருஷ்ணவேணி புகாரில் உடலை கைப்பற்றி பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 1, 2024

பூத் ஸ்லிப் வழங்குவதை ஆய்வு செய்த தேர்தல் அலுவலர்

image

இராமநாதபுரம் நகராட்சி பகுதியில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் ஸ்லிப் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாக்காளர்கள் யாரும் விடுபடாமல் அனைவரது வீட்டிலும் பூத் ஸ்லிப் ஊழியர்கள் வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

News April 1, 2024

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை தேர்தல் பிரச்சாரம்

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயப்பெருமாள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (மார்ச் 31) பரமக்குடியில் நடிகை விந்தியா ஜெயப்பெருமாளை ஆதரித்து பரமக்குடி பேருந்து நிலையம் முன்பாக இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்தி முனியசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

error: Content is protected !!