Ramanathapuram

News April 6, 2024

ராம்நாடு: விசைப்படகுகளுக்கு டீசல் மானியம் ரத்து

image

மண்டபம் தென், வடக்கு கடலில் தொழிலுக்குச் செல்லும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கு மாதம் 1,500 லிட்டர் மானிய டீசல் வழங்கப்படுகிறது. மேலும் சலுகைகளை பெற படகுகளுக்கு காப்பீட்டு திட்டம் அமலில் உள்ளது. இதில் 24 விசைப்படகுகளின் காப்பீடு காலாவதியாகி விட்டதால் வரும் நாட்களில் மீன்பிடி அனுமதி சீட்டு, மானிய டீசல் வழங்கப்பட மாட்டாது என மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

ராமநாதபுரம்: பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 262 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 4 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானவை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

ராம்நாடு: முட்புதருக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்

image

திருவாடானை தாலுகா எஸ்பி பட்டினம் அருகே உள்ள சோழகன்பேட்டை கிராமத்தில் ஓரியூர் செல்லும் சாலையில் உள்ள முனியய்யா கோவில் பகுதியில் முட்புதருக்குள் துர்நாற்றம் வீசி உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று (ஏப்.5) அங்கு சென்று பார்த்தபோது அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதை கண்டனர். தகவலறிந்த எஸ்பி பட்டினம் போலீசார் அழுகிய சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

News April 6, 2024

ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் மாவட்டங்களுக்கு இடையேயான 16, 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ள ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அணித்தேர்வு ஏப்ரல் 13 அன்று காலை 8 மணிக்கு சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. தேர்வில் பங்கேற்போர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, விளையாட்டு உபகரணங்களுடன் வரவும் என அதன் செயலாளர் மாரீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

News April 5, 2024

வாக்குப்பதிவு இயந்திரத்தில் இரட்டை இலை பளீச்

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மண்டபம் பேரூரில் இன்று மாலை வாக்கு சேகரித்தார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் 2 இடத்தில் பளீச் என தெரியும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் வேண்டும் என ஜெயபெருமாள் பேசினார்.
மாவட்ட அதிமுக செயலர் முனியசாமி, எஸ்டிபிஐ மாவட்ட பொதுச்செயலர் அப்துல் ஜெமீல் கூட்டணி கட்சியினர்
பங்கேற்றனர்.

News April 5, 2024

தபால் வாக்கு பதிவு – கலெக்டர் ஆய்வு

image

ஆர்.எஸ்.மங்கலம் வட்டம், துத்தியேந்தல் கிராமத்தில் 85 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்தில் தபால் வாக்களிப்பதை கலெக்டர் விஷ்ணு சந்திரன் இன்று ஆய்வு செய்தார். ராமநாதபுரம் நாடாளுமன்ற
தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்டோர் 1,722 பேர், மாற்றுத்திறனாளிகள்
1,844 பேர் என 3,566
வாக்காளர்களுக்கு
தபால் வாக்கு இன்று
முதல் ஏப்.9 வரை செலுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது .

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News April 5, 2024

விவசாயிடம் ரூ.2000 லஞ்சம்: விஏஓ கைது

image

பரமக்குடி தாலுகா காந்தி நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாய கூலி தொழிலாளியான இவர் வாரிசு சான்று வேண்டி இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்தார். இது தொடர்பாக எமனேஸ்வரம் விஏஓ பூமிநாதனை அணுகினார். அவரது மனுவை மேலதிகாரிக்கு பரிந்துரைக்க ரூ.2000 லஞ்சம் கேட்டார். இதையடுத்து சந்திரசேகரிடம் ரூ.2000 லஞ்சம் பெற்ற பூமிநாதனை ராமநாதபுரம் ஊழல் தடுப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.

News April 5, 2024

ராமநாதபுரம்: நகையை மீட்ட போலீஸ்

image

சாயல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் பெண்களுக்கு டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர்களிடம் நகைகளை திருடி செல்வதாக புகார் வந்தது. இதன்படி வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை பிடிக்க ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் தனிப்படை அமைத்தார். தீவிர விசாரணையில் திருச்சி தெற்கு மலைக்கோட்டையை சேர்ந்த முருகேஸ்வரியை நேற்று கைதுசெய்து அவரிடமிருந்து 24 பவுன் நகைகளை மீட்டனர்.

News April 4, 2024

சாதனை சிறார்களுக்கு எஸ்பி பாராட்டு

image

கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை 30 கிமீ தூரத்தை 9 வயது சிறுமி தாரகை ஆராதனா, 7 வயது சிறுவன் நிஷ்விக் ஆகியோர் இடைவிடாமல் நீந்திக் கடந்தனர். சாதனை புரிந்த இருவரையும் ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் இன்று பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

error: Content is protected !!