Ramanathapuram

News October 15, 2024

இராமநாதபுர இரவு ரோந்து பணி காவலர்கள் எண்

image

இன்று (14.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும், வேறு எதாவது உதவி தேவைப்பட்டால் உதவி எண் 100 ஐ டயல் செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 14, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 18.10.2024 அன்று காலை 10.30 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News October 14, 2024

ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீர் கூட்டம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும். அதன்படி, இன்று(14/10/2024) குறைதீர்க்கூட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான மக்கள் மனுக்களை அளித்தனர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் சித் சிங் காலோன் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மேலும், அந்தந்த துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்களுக்கு உறுதி அளித்தார் .

News October 14, 2024

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை வாய்ப்பு

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில்,சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. *உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணி தெரியப்படுத்தவும்*

News October 14, 2024

ராமநாதபுரத்தில் பெய்த மழையின் அளவு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பெய்த மழை அளவு ராமநாதபுரத்தில் 11 மி.மீ., மண்டபம் 12.20 மி.மீ., ராமேஸ்வரம் 45 மிமீ,பாம்பன் 8.30 மிமீ, தங்கச்சிமடம் 11.40மிமீ, திருவாடானை 33.80 மி.மீ., தொண்டி50 மி.மீ., ஆர்.எஸ்.மங்கலம் 16 மி.மீ., முதுகுளத்தூர் 4.20 மி.மீ., வாலிநோக்கம் 4 மி.மீ., கமுதி 7.60 மி.மீ. அளவில் மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சராசரியாக 19.52 மி.மீ., அளவில் மழை பதிவாகியுள்ளது.

News October 14, 2024

இராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே பகிரவும்.

News October 14, 2024

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை உமாதேவி DSP தலைமையில் காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News October 13, 2024

ராமேஸ்வரத்தில் கலாம் ஹால்ப் மாரத்தான்

image

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு வரும் அக்.,15 அன்று அவரது நினைவிடத்தில் காலை 5:30 மணி அளவில் மாரத்தான் போட்டி நடக்கவிருக்கிறது. பள்ளி குழந்தைகளுக்கு 5 கிலோமீட்டர், பெண்களுக்கு 10 கிலோமீட்டர், ஆண்களுக்கு 21 கிலோமீட்டரும் போட்டி நடக்கவிருக்கிறது.

News October 13, 2024

திருமாவளவனை கீழக்கரை நகர் செயலாளர் சந்திப்பு

image

கேரள மாநிலம் கோட்டயத்தில் கேரளா மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் தலித் – ஆதிவாசி கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள தொல் திருமாவளவன் சென்றார். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை விடுதலை சிறுத்தை கட்சியின் நகர் செயலாளர் ஹிதாயத்துல்லா சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார்.

News October 13, 2024

இராமநாதபுரம்: உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

image

ராம்நாடு எம்பி நவாஸ்கனி உயர்கல்வி பயிலும் 700க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா வருகிற (அக்.19) கேணிக்கரை யாஃபா மஹாலில் நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக மதுரை எம்.பி வெங்கடேசன் தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு கல்வி உதவித்தொகை வழங்குகின்றனர்.