Ramanathapuram

News November 17, 2024

1.5 கோடி மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல்

image

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இலங்கை கடற்படையினரும், கல்பிட்டியா போலீசாரும் இணைந்து முசல்பிட்டியா பகுதியில் நடத்திய சோதனையில், 18 சாக்கு மூட்டைகளில் இருந்த 4 லட்சத்து 42,680 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ.1.50 கோடி என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News November 17, 2024

சாத்தக்கோன்வலசையில் பாஜக கிளை தேர்தல்

image

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் கிழக்கு ஒன்றியம் சாத்தக்கோன்வலசை ஊராட்சியில் பாஜக கிளை தேர்தல் இன்று நடைபெற்றது. கிழக்கு மண்டல தலைவர் கதிரவன் தலைமை வகித்தார். இதில் கிளைத்தலைவராக நாகு நாகேந்திரன் மற்றும் புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கான கட்சி பணி குறித்து தேர்தல் பணி பொறுப்பாளர்கள் எடுத்துரைத்தனர்.

News November 17, 2024

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று கனமழை

image

தமிழகத்தில் இன்று (நவ.17) 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 17, 2024

வாக்காளர் முகாமில் திருத்தம் மேற்கொள்ள 2ம் நாள்

image

தமிழகத்தில் நேற்றும், இன்றும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதற்காக இந்தியத்தேர்தல் ஆணையம், நவ.16, 17 மற்றும் 23, 24 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன. ராமநாதபுரம் மக்கள் தங்கள் அருகிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாமில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

News November 17, 2024

ராமநாதபுரம் இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி

image

ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் சார்பில் படித்த வேலை இல்லாத இளைஞர்கள் தொழில் துவங்க வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் அரசு மானியத்துடன் வங்கி கடன் பெறலாம்.இதில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை வங்கி கடன் பெறலாம். www.msmeonline.tn.gov.in/uvegp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தொழில் மைய அலுவலக தொலைபேசி 04567–290459, 89255 33983, 89255 33984 எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News November 16, 2024

இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம் வெளியீடு

image

இன்று (16.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 16, 2024

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்

image

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1,374 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் இன்று நடந்தது. இதன்படி சக்கரக்கோட்டை ஊராட்சி மேலச்சோத்தூரணி நூலக கட்டடம், வாணி, காரிக் கூட்டம் தொடக்கப்பள்ளி வளாகங்களில் நடந்த வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமை சக்கரக்கோட்டை ஊராட்சி தலைவர் யாழினி புஷ்பவள்ளி பார்வையிட்டார்.

News November 16, 2024

கூட்டு பாலியல் வழக்கில் சாட்சி விசாரணை

image

பரமக்குடியில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நகராட்சி கவுன்சிலர் சிகாமணி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு ராமநாதபுரத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு (நவ.13) விசாரணைக்கு வந்தது. இதில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் நவ. 20 ல் சாட்சிகள் விசாரணை துவங்க நீதிபதி உத்தரவிட்டார்.

News November 16, 2024

பவர்ஸ்டார் சீனிவாசன் வழக்கு ஒத்திவைப்பு

image

தேவிபட்டினத்தைச் சேர்ந்த இறால் பண்ணை உரிமையாளர் முனியசாமியிடம் தொழில் விருத்திக்கு கடன் வாங்கி வருவதாக கூறி ரூ.15 லட்சம் செக் மோசடி செய்ததாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது செக் மோசடி வழக்கு இராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண் 1ல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று அந்த வழக்கில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆஜராகாத நிலையில் விசாரணையை ஜனவரி 24ம் தேதிக்கு நீதிபதி நிலவேஸ்வரன் ஒத்தி வைத்தார்.

News November 16, 2024

இராமநாதபுரத்தில் இன்று ரேஷன்கடை விடுமுறை

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடை பணியாளர்கள் அக்டோபர் 27ல் வேலை செய்தனர். அதற்கு ஈடாக விடுமுறை விடப்படும் என உணவுப்பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்தது. அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை நாளான இன்று(நவ.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாதத்தின் மூன்றாவது ஞாயிறு என்பதால் நாளையும்(நவ.17) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.