India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்டம் திருவெற்றியூர் அருகே உள்ள யேலூர் கிராமத்தை சேர்ந்த ராசு என்பவரது மகன் ரமேஷ் (43). இவர் நேற்று பண்ணைவயல் அத்தானி கண்மாய் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு குடிபோதையில் கண்மாயில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பலியானார். இவரது மனைவி பரிமளா (33) கொடுத்த புகாரில் திருவாடானை போலீசார் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி பொதுத்தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில்
பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த இயந்திரங்கள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன், எஸ்பி சந்தீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
தொண்டி அருகே வெள்ளாளகோட்டை இயேசுபுரத்தில் புனித வனத்து சின்னப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று (மே 14) நடைபெற்றது. இதனையொட்டி புதிய கொடிமரம் அர்ச்சித்தல், கொடி மந்திரித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொண்டி பங்குத்தந்தை வியாகுல அமிர்தராஜ் புனிதரின் திருவுருவம் பொறித்த கொடியை ஏற்றிவைத்து திருவிழா திருப்பலியை நிறைவேற்றினார். பின்னர் மறையுறை நிகழ்த்தப்பட்டது. இதில் ஏராளமான இறை மக்கள் கலந்துகொண்டனர்.
ஏப்.19ல் நடந்த ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி ஜூன் 4ல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (14.5.2024) மாலை ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர், அரசு முதன்மைச் செயலர் சத்ய பிரதா ஷாஹு தலைமை வகித்து பணிகளை ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பில் 100 % தேர்ச்சி பெற்ற நிலையில் இன்று காலை வெளியான பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்விலும் 100% தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது. மேலும் கணினி அறிவியல் பாடத்தில் 7 பேர், வேதியியல் பாடத்தில் 2 பேர், பொருளியல் பாடத்தில் ஒருவர் என சதமடித்து சாதனை புரிந்துள்ளனர்.
ராமநாதபுரம் பட்டணம்காத்தான்
இசிஆர் பகுதிகளில் மாலை நேர தள்ளுவண்டி கடைகள், வாகனங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் சுகாதார மின்றி விற்கப்படுவதாக புகார் எழுந்தது. மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் இப்பகுதிகளில் உள்ள அசைவ உணவு கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது உணவு பொருட்களில் அதிக நிறமி சேர்த்த அரை கிலோ சிக்கன் வகைகள், கால் கிலோ அஜினமோட்டோ பறிமுதல் செய்து அழித்தனர்.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாடானை: செவிலியேந்தலைச் சேர்ந்த அசோக் குமார் (40) கோவையில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். ஊருக்கு வந்த நிலையில் வீட்டின் எதிரில் இருந்த ஊரணியில் மீன்பிடித்தபோது நீரில் மூழ்கி மயங்கினார். தீயணைப்புத் துறையினர் மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். திருவாடானை போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
முதுகுளத்தூர் சாம்பகுளம் இந்திரா குடிநீர் தொட்டியை சேதப்படுத்தியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாக நுழைவு வாயில் முன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து கலெக்டரிடம் மனு அளித்துச் சென்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் 11ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 89.47% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 84.64 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.30 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.