India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருஉத்தரகோசமங்கை அருகே உள்ளது சுமைதாங்கி. இந்த ஊரை சேர்ந்தவர் பாலமுருகன் என்ற பாலாஜி (34). மைக் செட் வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நேற்று அதிகாலை அவரின் வயல்வெளிக்கு அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அவரின் மனைவி வனஜா தனது கணவரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அளித்த புகாரின்படி திருஉத்தரகோசமங்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் புது அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் மதியழகன். நிதி தணிக்கை உதவி இயக்குநராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.பூட்டிக் கிடந்த இவரது வீட்டில் 45 பவுன் நகை மார்ச் 8ல் திருடு போனது.இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இது தொடர்பாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் மோகன் (39), மதுரை காளவாசல், சம்மட்டிபுரம் மகேந்திரன் (33) ஆகியோரை பஜார் போலீசார் நேற்று கைது செய்தனர்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-யையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தன. இதன் காரணமாக, ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கிராமப் பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நடைபெறாது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் இருந்து 484 விசைப்படகுகள் நேற்று (மார்ச் 16) காலை மீன் பிடிக்கச் சென்றன. இந்நிலையில் இலங்கை நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகளையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து காரைநகர் கொண்டு சென்றனர். இவர்களுக்கு மார்ச் 27 வரை நீதிமன்ற காவல் விதித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் புதுப்பட்டிணம் ஊராட்சிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார். மரத்தடிநிழலில் தரையில் அமர்ந்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றும்
கனிவாக பேசியும் குறைகளை கேட்டறிந்த ஆட்சியரை இப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பரமக்குடியில் 2,52,642, திருவாடானையில் 2, 92, 214 , ராமநாதபுரத்தில் 3, 14, 236 , முதுகுளத்தூரில் 3,09, 928, அறந்தாங்கியில் 2,27,059, திருச்சுழியில் 2, 09, 971 என 7, 97, 012 ஆண்கள், 8, 08, 955 பெண்கள் என 16, 06, 050 வாக்காளர்கள் உள்ளனர் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் 48 பறக்கும் படை, 24 நிலையான கண்காணிப்பு குழுவும், தலா 6 வீடியோ கண்காணிப்பு குழுவும், வீடியோ பார்வை குழுவும், கணக்கியல் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் 3121 வாக்குப்பதிவு எந்திரங்களும், 1808 எந்திர கட்டுப்பாட்டு கருவிகளும், 2186 வாக்காளர் சரிபார்க்கும் தாள் கருவியும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள் தேர்தல் மாதிரி நடத்தை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மண்டபங்களை வாடகைக்கு விடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது. அரசியல் கட்சிகள் தங்குவதற்கும் அனுமதிக்க கூடாது என மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திர எச்சரித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர்/மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள 29 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, https://cra.tn.gov.in/-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.