India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். தர்மர் எம்பி உள்பட பல நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் 2024-க்கான வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பணி குறித்த பயிற்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று நடந்தது. ஜூன் 4ல் நடைபெறும் இப்பணியில் மேற்பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்கள், பணியாளர்கள் என 400 பேர் ஈடுபடுவர் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். டிஆர்ஓ கோவிந்தராஜலு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) இளங்கோவன் உடனிருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் துறைமுகத்தில் தொலைதூர புயலை எச்சரிக்கும் வகையில் ஒன்றாம் எண் புயல் கூண்டை துறைமுக அதிகாரிகள் இன்று ஏற்றி உள்ளனர். இதனை அடுத்து ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விசைப்படகு மற்றும் நாட்டுபடகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி ஜூன் 4ல் நடைபெற உள்ளது. இதையொட்டி ராமநாதபுரம், திருவாடானை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் பணிக்கு முகவர்கள் நியமிக்கும் பணியை ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பார்வையிட்டார்.
ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளின்படி, ஒவ்வொரு கர்ப்பிணியும் கர்ப்பத்தை பதிவுசெய்து, RCH ID எனப்படும் பிக்மி எண் பெறுவது மிக அவசியமாகும். கர்ப்பிணிகள் தாங்களாகவே சுயமாக பிக்மி இணையதள வழியில் RCH ID எண் பெறுவதற்கு https:/Picme.tn.gov.in/Picme – Public/ என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கோடை மழை பெய்து வரும் நிலையில் இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்தது. தொடர்ந்து மாலை திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து பரமக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கும்பகோணத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் இன்று பரமக்குடியில் இருந்து மதுரைக்கு, மதுரை – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் சென்றுள்ளார். அப்போது பரமக்குடி அடுத்த சூடியூரில் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரம் அமர்ந்திருந்த முதியவர் கருப்புசாமி என்பவர் மீது மோதி கவிழ்ந்தது. இதில் கருப்பசாமி கால் துண்டான நிலையில், காரில் பயணித்த ஐந்து பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள, தனுஷ்கோடி சுற்றுலாத் தலத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகைதந்து கடலின் அழகை ரசித்துச் செல்வர். இந்நிலையில் நள்ளிரவு முதல் பலத்த காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமும் அதிகமாக காணப்படுவதால் பாதுகாப்பு கருதி இன்று சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்திற்கு நேற்று வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கைத்தறி நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் நெசவாளர்களால் நெய்யப்பட்ட கைத்தறி பட்டு புடவைகளை பார்வையிட்டார். பின்பு பட்டுக்கடைக்குப் புகழ்பெற்ற ஆண்டாள் சில்க்ஸ் கடையில் பட்டுப் புடவைகள் வாங்கி மகிழ்ந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் ராஜ்யசபா உறுப்பினர் தர்மர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.