Ramanathapuram

News March 30, 2024

தே.ஜ. கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

image

ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ராமநாதபுரம் சட்டமன்றத்திற்குட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக, அமமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

News March 29, 2024

தேர்தலை புறக்கணித்த கிராம மக்களிடம்  பேச்சுவார்த்தை தோல்வி

image

மண்டலமாணிக்கம் ஊராட்சிக்குள்பட்ட கோடாங்கிபட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அந்த கிராம மக்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து கமுதி வட்டாட்சியர் சேதுராமன், காவல் ஆய்வாளர் குருநாதன், விஏஒ பாண்டி, தனிபிரிவு உதவி ஆய்வாளர் முத்துசாமி உள்ளிட்டோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டப்படாததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

News March 29, 2024

ராம்நாடு: தேர்தல் விதிமுறைகளை மீறிய திமுக 

image

திருவாடானை தாலுகா காரங்காடு மற்றும் நம்புதாளையில் இன்று திருவாடனை சட்டமன்ற தொகுதியில் தாசில்தார் ஸ்ரீதர் மாணிக்கம் தலைமையிலான சப் -இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் பறக்கும் படையினர் தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஊனப்பட்டிருந்த தி.மு.க. கொடிக்கம்பங்களை அதிரடியாக அகற்றினர்.

News March 29, 2024

நவாஸ் கனி தீவிர வாக்கு சேகரிப்பு 

image

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நவாஸ்கனி பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களை சந்தித்து ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் காரங்காடு கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்கப்படும் என்றும் மின் பற்றாக்குறை சரி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்.

News March 29, 2024

தேர்தல் நடத்தை விதி மீறல்: 150 பேர் மீது வழக்கு

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளர் மார்ச்.25ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது தேர்தல் நடத்தை விதிகளை அதிமுகவினர் மீறியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஜெயபெருமாள், மாவட்ட அதிமுக செயலர் முனியசாமி உட்பட 150 பேர் மீது போலீசார் நேற்று மதியம் வழக்கு பதிந்தனர்.

News March 29, 2024

முன்னாள் எம்.பி சகோதரர் அதிமுகவில் ஐக்கியம்

image

ராமநாதபுரம் முன்னாள் எம்.பி ரித்தீஷின் சகோதரர் மணி, நயினார்கோவில் ஒன்றிய பாஜக செயலர் கார்த்திக் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலர் முனியசாமி தலைமையில், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாள் முன்னிலையில் அதிமுகவில் நேற்று இணைந்தனர். நயினார் கோயில் வடக்கு ஒன்றிய அதிமுக செயலர் குப்புசாமி ஏற்பாடு செய்தார்.

News March 28, 2024

ராமேஸ்வரம்: மீனவர்கள் 7 பேர் விடுதலை

image

ராமேஸ்வரத்தை சேர்ந்த 2 படகுகள், அதிலிருந்த மீனவர் 7 பேரை மன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை மார்ச் 21 அதிகாலை கைதுசெய்தது. மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர் 7 பேரையும் இன்று (மார்ச் 28) வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மீனவர் 7 பேரையும் நிபந்தனையுடன் நீதிபதி லத்தீப் விடுவித்து உத்தரவிட்டார்.

News March 28, 2024

ராம் நாடு: 7 பேர் வேட்பு மனுக்கள் ஏற்பு

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தலில் போட்டியிட 42 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் அதிமுக, இந்திய கூட்டணி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், நாதக & 3 சுயேச்சை உள்பட 7 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டன. ஏனைய மனுக்கள் மீது தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

News March 28, 2024

ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு 

image

ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகின்றார். இந்த நிலையில் பல்வேறு கட்சியை சார்ந்த நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்து புரட்சி முன்னணியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ஹரிதாஸ் சர்மா நேற்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை சந்தித்து சால்வை அணிவித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

News March 28, 2024

தேர்தல் விதியை மீறியதாக ஓபிஎஸ் மீது வழக்கு

image

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் 25ஆம் தேதி பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன், இ.யூ.மு.லீக் வேட்பாளர் நவாஸ் கனி, திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி உள்ளிட்டோர் மீது கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!