India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடிகளை ஆட்சியர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டார். பின்பு கோகுல் நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கி தொடங்கிவைத்தார். பேருந்து நிலையத்தில் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களால் வரையப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு ஓவியங்களைப் பார்வையிட்டார். உடன் வட்டாட்சியர் சடையாண்டி, டிஎஸ்பி சின்ன கண்ணு, இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி உடனிருந்தனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் நவாஸ் கனிக்கு ஆதரவாக முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாஸ் நயினார் கோவிலில் இன்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். முன்னதாக முத்துராமலிங்கத் தேவர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சக்தி, கவுன்சிலர் மணிமன்னன் உட்பட கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினங்கள் குறித்த ஒத்திசைவுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஏப்ரல் 5, 10, 17 ஆகிய தேதிகளில் தேர்தல் செலவின பார்வையாளர் ஹீரா ராம் சௌத்ரி தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் வேட்பாளர்கள் செலவின பதிவேடுகளை சமர்ப்பித்து ஒத்திசைவு செய்ய வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக ஆதரவோடு போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திருவாடானை யூனியன் சி.கே. மங்களம், மங்களக்குடி, ஆண்டாவூரணி, வெள்ளையபுரம், ஓரியூர், பாண்டு குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திறந்தவெளி வேனில் நின்று பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது ராமநாதபுரம் தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பேன் என்றும் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக நல்ல மழை பெய்துவருகிறது. இந்த நிலையில் இன்று மதியம் 1 மணிக்குள் (அடுத்த 3 மணி நேரத்தில்) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேவிபட்டினம் முனியசாமி என்பவரிடம் அவரின் தொழிலை மேம்படுத்த ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆவண செலவாக ரூ.14 லட்சம் வாங்கினாராம். கடன் வாங்கி தராமல் தான் வாங்கிய பணத்திற்காக போலி செக் கொடுத்து ஏமாற்றியதாக ராமநாதபுரம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு நேற்று பவர்ஸ்டார் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி வழக்கினை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதுகுளத்தூர் தொகுதி தேரிருவேலி, கடம்போடை உள்ளிட்ட கிராமங்களில் இந்திய கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனிக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் வாக்கு சேகரித்து இன்று பிரசாரம் செய்தார். மகளிர் உரிமைத்தொகை, புதுமைப் பெண் கல்வி உதவித்திட்டம், அரசு பேருந்துகளில் கட்டணமின்றி மகளிர் பயணம் உள்ளிட்ட திட்ட பயன்கள் குறித்து அமைச்சர் பேசினார். காதர்பாட்ஷா பாட்ஷா முத்துராமலிங்கம் எம் எல்ஏ உள்பட பலர் உடன் சென்றனர்
பரமக்குடியில் 9ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி 3வது வார்டு கவுன்சிலர் சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், ராஜாமுகமது, தரகர்கள் உமா, கயல்விழி ஆகியோரை கைதுசெய்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், ராமநாதபுரம் கூடுதல் மகளிர் கோர்ட்டில் 5 பேரும் நேற்று ஆஜரான நிலையில் வரும் 8ஆம் தேதிக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட புது மடத்தில் SDPI – அஇஅதிமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் நேற்று (ஏப்ரல் 1) திறக்கப்பட்டது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பா.ஜெயப்பெருமாள் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் SDPI கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டார்.
Sorry, no posts matched your criteria.