India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரமக்குடியில் இன்று போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் அச்சமின்றி வாக்களிப்பதற்காக பரமக்குடி டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார், துணை ராணுவ படையினர்கள் கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் இருந்து பஜார் வரை கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, அன்வர்ராஜா, கீர்த்திகா முனியசாமி, Ex அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இராமநாதபுரம் எம்பி தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனிக்கு மீண்டும் ஏணி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. கடந்த முறை இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டியிட்ட நவாஸ் கனிக்கு இம்முறையும் அதே சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் ஏணி சின்னத்தில் வாக்குச் சேகரிப்பில் நவாஸ் கனி தீவிரமாக ஈடுபட உள்ளார்.
இராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள தனியார் திருமண மஹாலில் நாடாளுமன்றத் தொகுதியில் இண்டி கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
கீழக்கரை சார்பாக நகர் கழக செயலாளர் பசீர் அஹமது தலைமையில் கீழக்கரை நகர் கழக நிர்வாகிகள் பெரும்பாலோனோர் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் உள்ள பல ஊர்களிலிருந்து கழக நிர்வாகிகள் பலரும் வந்து கலந்து கொண்டனர்.
பெருங்குளம் அருகே நதிப்பாலம் விலக்கில்
இரவில் அவ்வழியே செல்வோரை ஒரு கும்பல் ஆயுதங்களை காட்டி மிரட்டுவதாக ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் சிலர் புகாரளித்தனர். இது தொடர்பாக விசாரணையில் பெருங்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், கேதீஸ்வரன், முகிலன், அஜய் & 3 சிறுவர் உட்பட 7 பேரை உச்சிப்புளி போலீசார் இன்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட காங் கமிட்டி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. கருமாணிக்கம் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டி முன்னிலை வகித்தார். திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வாக்கு சேகரித்து பேசினார். மாவட்ட காங் பொறுப்பாளர்கள் செல்லத்துரை அப்துல்லா, ராஜாராம் பாண்டியன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி பேசினர்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குப்பதிவு, தேர்தல் பணி அலுவலர்கள் பணியாளர்கள் பணியிடம் கணினி மூலம் தேர்வுசெய்து ஒதுக்கீடு செய்யும் பணி இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய 4 தொகுதிகளில் 1,374 வாக்குப்பதிவு மையங்களில் ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் என 12,000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர் என தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று (மார்ச் 22) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்தத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படலாம். எனவே அதற்கு மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் நேற்று (மார்ச் 21) ராமநாதபுரம் வருகைபுரிந்தார். அவருக்கு மாவட்ட எல்லையில் மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமையில் வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் கே.ஆர்.சுரேஷ் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, மணிகண்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
வரும் மக்களவை தேர்தலில் ராமநாதபுர நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இவர் பாஜக கூட்டணியில் இடம் பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதில் எங்களின் தொண்டர் பலத்தை நிருபிப்போம் எனவும் சூளுரைத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.