Ramanathapuram

News April 9, 2024

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ம.பி முதல்வர் பிரச்சாரம்

image

ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் நாளை ராமநாதபுரத்தில் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக நாளை(ஏப்.10) காலை மதுரை வரும் அவர் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிற்பகலில் ராமநாதபுரம் வந்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.

News April 9, 2024

இருவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

image

பொட்டல்பச்சேரி கிராமத்தில் 2017ஆம் ஆண்டு துரைராஜ் என்பவருக்கும் – செல்லப்பாண்டி, எலிசபெத் ஆகியோருக்கும் இடையே கொடுக்கல்-வாங்கல் பிரச்சனை ஏற்பட்டது. சிக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடலாடி மாவட்ட உரிமையியல் (ம) நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று (ஏப்.8) செல்லப்பாண்டி, எலிசபெத் ஆகியோருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

News April 8, 2024

மீனவர்கள் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை

image

மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மற்றும் இழுவை படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. தடை காலத்தை ஒட்டி வரும் 14ஆம் தேதி அன்று இரவு 12 மணிக்கு முன்னர் மீனவர்கள் கட்டாயம் கரை திரும்ப வேண்டும் இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்

News April 8, 2024

மமக தலைவர் குற்றச்சாட்டு

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் கீழக்கரையில் இன்று நடந்தது. தமுமுக மாநில துணை பொதுச்செயலர் சலிமுல்லாஹ்கான் தலைமை வகித்தார். இதில் பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மீனவர்களை வஞ்சிக்கும் மத்திய அரசு கச்சத்தீவு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது என்றார்.

News April 8, 2024

தேர்தல் விதிமீறல் 60 வழக்குகள்: எஸ்.பி.சந்தீஷ்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதைத்தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இதன்படி இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி. சந்தீஷ் தெரிவித்தார்

News April 8, 2024

திமுக கூட்டணி சார்பில் மீனவர் சந்திப்பு கூட்டம்

image

இந்திய கூட்டணி சார்பில் மீனவர் சந்திப்பு கூட்டம் பாம்பனில் இன்று நடந்தது. திமுக மாவட்ட செயலர் காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்தார். பனை தொழிலாளர் நலவாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் முன்னிலை வகித்தார். அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ஓபிஎஸ் யாருக்காவது உதவி செய்துள்ளாரா? என்றார். அமைச்சர் ராஜகண்ணப்பன், நவாஸ் கனி எம்பி வாக்கு சேகரித்து பேசினர்.

News April 8, 2024

ராம்நாடு: உரிமம் இல்லாத பைக்குகள் பறிமுதல்

image

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 18 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்கள், சிறுவர்கள் அதிகமாக ஒலி எழுப்பும் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் காவல்துறையினர் உரிமம் இல்லாத இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

News April 7, 2024

ராமநாதபுரம் அருகே சர்ச்சை போஸ்டர் 

image

ஆதியாகுடி கிராமத்திற்கு செல்லும் சாலையை தார் சாலையாக அமைத்து தர கோரியும் பல ஆண்டுகளாக கண்மாய் தூர்வார வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தை
கண்டித்து வருகிற 19 ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஆதியாகுடி கிராம மக்கள் சார்பில் போஸ்டர் ஒட்டி அறிவித்துள்ளனர்.

News April 7, 2024

உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரிந்து கொண்டு வாக்களிக்கவும்

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <>-1 <<>>என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 6, 2024

ராம்நாடு கலெக்டர் எச்சரிக்கை

image

14 வயதுக்குட்பட்ட சிறாரை தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுத்துதல் சட்டபடி குற்றம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரத்தில் சிறாரை பங்கேற்க செய்தால் வேட்பாளர்கள், முகவர்கள், அவர்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!