India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்புனவாசல் பகுதியில் திரண்டிருந்த பொதுமக்களிடையே பலாப்பழத்துடன் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். முன்னாள் எம்எல்ஏ ரத்தினசபாபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் நல்ல மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜெகதாபட்டணத்தில் கூடியிருந்த பொதுமக்களிடையே பலாப்பழம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அறந்தாங்கி முன்னாள் எம்எல்ஏ ரத்தினசபாபதி உடனிருந்தார்.
தேவிபட்டினம் முனியசாமி என்பவரிடம் அவரின் தொழிலை மேம்படுத்த ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆவண செலவாக ரூ.14 லட்சம் வாங்கினாராம். கடன் வாங்கி தராமல் தான் வாங்கிய பணத்திற்காக போலி செக் கொடுத்து ஏமாற்றியதாக ராமநாதபுரம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு நேற்று பவர்ஸ்டார் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி வழக்கினை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தொண்டியில் நாளை நடைபெற உள்ள ரமலான் பெருநாளையொட்டி மேல பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல், கடற்கரை பள்ளிவாசல் உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல்களும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது. நாளை காலை சிறப்பு தொழுகை நடைபெற உள்ளது. ரம்ஜான் பெருநாளையொட்டி இஸ்லாமிய மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் தொகுதியில் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் IUML வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத்தலைவர் குணா முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்..
திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தான ராணி மதுராந்தகி நாச்சியார் நிர்வாகத்திற்கு உட்பட்ட அருள்மிகு வாழவந்த நாயகி அம்பாள் திருக்கோவிலின் 1433-ம் பசலி பிரம்மோற்சவம் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதனையொட்டி சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகளும் நடைபெற்றன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிறகு சுவாமி அம்மன் வீதி உலா நடைபெற்றது.
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 6 வயது மாணவியை பள்ளி ஆசிரியை அடித்ததில் கால் வீக்கமடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவியின் தாயார் லெட்சுமி அளித்த புகாரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் பள்ளி ஆசிரியை ஜெயப்ரியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
30 நாள் நோன்பு முடிவில் நாளை (வியாழக்கிழமை) தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதன்படி ராமநாதபுரம்- மதுரை ரோட்டில் உள்ள ஈதுகா கோரி தோப்பு மைதானத்தில் நாளை காலை 9 மணிக்கு ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு ரம்ஜான் சிறப்பு தொழுகை மேற்கொள்ள உள்ளனர்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் சாயல்குடியில் பிரச்சாரம் செய்தார். அதற்கு முன்னதாக கனிமொழி எம்பி பிரச்சாரம் செய்த நிலையில் கலைந்துசென்ற திமுக தொண்டர்களும் பொதுமக்களும் அதிமுக வேட்பாளரை கண்டதும் வரவேற்பதுபோல கைகளை காட்டி ஆரவாரம் செய்தனர். இச்செயல் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இரு வேட்பாளர்களுக்கும் தங்கள் மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.