India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு 146 மையங்களில் 165 அறைகளில் நடைபெற்றது. இதில் 41,445 நபர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 32,863 பேர் மட்டும் தேர்வு எழுதினர். தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்கள் நகர்வு குழுக்கள் மூலம் காவல்துறை பாதுகாப்புடன் கருவூலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஆட்சியர் விஷ்ணு சந்திரன் நேரில் பார்வையிட்ட ஆய்வுசெய்தார்.
திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலராக (கி. ஊ) பணியாற்றிய கே.சந்திரமோகன், சமுதி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி. ஊ) திருப்புல்லாணி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) பி.ஆரோக்கியமேரி சாராள் பதவி உயர்வு பெற்று திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சியாகவும் பணி மாறுதல் செய்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1433-ம் பசலி ஜமாபந்தி ஜூன் 11 முதல் 20 வரை (சனி, ஞாயிறு, திங்கள் தவிர) தாலுகா வருவாய் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
இதில் கோரிக்கை மனுக்களை ஜமாபந்தி அலுவலர் & https://cmhelpline.tnega.org/support/iipgcms/ என்ற இணையதளம், இ-சேவை மையம் மூலம் ஜூன் 11 முதல் 20 வரை பதிவேற்றம் செய்து உரிய தீர்வு பெறலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய லோக் அதாலத் நேற்று நடந்தது. இதில்
1,048 வழக்குகளுக்கு ரூ.7.10 கோடி தீர்வு தொகை வசூலானது. முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி குமரகுரு, கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி உத்தமராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகன்ராம், சார்பு நீதிபதி அகிலாதேவி நீதித்துறை நடுவர்கள் நிலவேஸ்வரன், பிரபாகரன் கூடுதல் மகிளா நீதிபதி வெர்ஜின் வெஸ்டா பங்கேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட காவல் அதிகாரிகள் பங்கேற்ற மெல்லோட்டத்தை எஸ்பி சந்தீஷ் இன்று துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அரங்கு துவங்கிய 3 கிமீ தூர ஓட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வாரம் 3 முறை நடைபெறும் இந்த மெல்லோட்டத்தில் 2 கிமீ தூரத்தை ஓடி நிறைவு செய்யும் காவல் துறையினக்கு மாவட்ட காவல் நிர்வாகம் சார்பில் வெகுமதி வழங்கப்படும் என எஸ்பி சந்தீஷ் தெரிவித்தார்.
முதுகுளத்தூர் அருகே இறைச்சிகுளம் பேராயிரமூர்த்தி அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நேற்று இரவு நடந்தது. சுவாமி குதிரை, தவழும் பிள்ளை உள்ளிட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. நெல், நவதானியங்களை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர். பக்தர்கள் இன்று காலை பொங்கல் வைத்து வழிபட்டனர். இதன் பின் கிடா வெட்டு நிகழ்ச்சி நடந்தது. 7 ஆண்டுகளுக்கு பின் நடந்த விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய லோக் அதாலத் இன்று நடந்தது. முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி குமரகுரு தலைமை வகித்தார். கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி உத்தமராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகன்ராம், சார்பு நீதிபதி அகிலாதேவி, நீதித்துறை நடுவர்கள் நிலவேஸ்வரன் பிரபாகரன், கூடுதல் மகிளா நீதிபதி வெர்ஜின் வெஸ்டா, வழக்கறிஞர் சங்க பொருளர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேவிபட்டினம் முனியசாமி என்பவரிடம் அவரின் தொழிலை மேம்படுத்த ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆவண செலவாக ரூ.14 லட்சம் வாங்கினாராம். கடன் வாங்கி தராமல் தான் வாங்கிய பணத்திற்காக போலி செக் கொடுத்து ஏமாற்றியதாக ராமநாதபுரம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு நேற்று பவர்ஸ்டார் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி வழக்கினை வரும் 12ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தொண்டியை சேர்ந்தவர்கள் முகமது இசாம்(15). அவரது நண்பர் 15வயது சிறுவன். இருவரும் இசிஆர் சாலையில் தொண்டியிலிருந்து பி.வி.பட்டினத்தை நோக்கி நேற்று டூவீலரில் சென்றனர். காந்திநகர் அருகே சாலை ஓரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதியதில் முகமது இசாம் அதே இடத்தில் பலியானார். பலத்த காயமடைந்த மற்றொரு சிறுவன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 25 ஆண்டுகள் தலைமை காவலர்களாக தண்டனை ஏதுமின்றி பணியாற்றி வந்த 62 பேர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி பெற தகுதி பெற்றிருந்தனர். இதை தொடர்ந்து நேற்று ராமநாதபுரம் டிஐஜி துரை தலைமை காவலர்கள் 62 பேருக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் விரைவில் பல்வேறு போலீஸ் நிலையத்தில் பணி நியமனம் செய்ய பட உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.