India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாடானையைச் சேர்ந்தவர் கருமொழிஜோசப் (54), Ex ராணுவ வீரர். இவர் நேற்று மாலை திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில்
வாக்கிங் சென்றார். அப்போது பின்னால் வந்த கார் இவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவரை தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த திருவாடானை போலீசார் அவரது உடலை மீட்டு வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
உச்சிப்புளி வட்டார வேளாண்துறை சார்பில் மானாங்குடியில் அட்மா கிராம வேளாண் முன்னேற்றக் குழு விவசாயிகளுக்கு காரிப் (கோடை) பருவ பயிற்சி இன்று நடந்தது. முதல்வரின் மண்ணுயிர் காப்போம் திட்டம், கோடை உழவு, மண் பரிசோதனை, உழவன் செயலி பயன்பாடு குறித்து உச்சிப்புளி வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி, உதவி மேலாளர் பவித்ரன் பேசினர். உச்சிப்புளி வேளாண் வட்டார அட்மா திட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று எஸ்பி சந்தீஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எஸ்பியிடம் கொடுத்தனர். குறிப்பாக குடும்ப பிரச்சனை, பணம் தகராறு உள்ளிட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டன. மனுக்களை பெற்ற எஸ்பி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் பள்ளிக் கல்வித் துறை சார்பில் யோகா ஒலிம்பியாட் மாவட்ட அளவிலான மாணவர்கள் தேர்வு நேற்று (ஜூன் 11) நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்யராஜ் துவக்கி வைத்தார். உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, உடற்கல்வி இயக்குநர் ராஜசேகர், உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், கோபி லட்சுமி, சிவக்குமார், வின்சென்ட் சேவியர், பாலசுந்தரம் தேர்வு செய்தனர். இதில் தேர்வாகும் மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர்.
பெருங்குளம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட கீழநாகாச்சி
பீடரில் உள்ள பழுதடைந்த மின் கம்பங்கள், மின்வயர்களை மாற்றி அமைக்கும் பணிக்காக இன்றுமுதல் (ஜூன் 12) நாளை மறுநாள்வரை (ஜூன் 14) 3 நாள்களுக்கு உச்சிப்புளி, துத்திவலசை, என்மனம்கொண்டான், காமராஜர் நகர், மரம் வெட்டிவலசை, அரசு ஆரம்ப சுகாதர நிலையம், மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 முதல் 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரமக்குடி வைகை நகரில் வசிப்பவர் முருகானந்தம் (45) கடந்த 2021ம் ஆண்டு பரமக்குடியிலிருந்து வீட்டிற்கு சித்தனேந்தல் மலைச்சாமி என்பவர் ஆட்டோவில் சென்றார். அப்போது 23 பவுன் நகைகளுடன் கைப்பையை ஆட்டோவில் விட்டு சென்றுள்ளார். ஆட்டோ டிரைவர் இல்லை என மறுக்கவே முருகானந்தம் ராம்நாடு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் உத்தரவின்படி எமனேஸ்வரம் போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள BC, MBC, சீர்மரபினர் விடுதிகளில் சேரத்தகுதி உடைய பள்ளி, கல்லூரி மாணாக்கர் தங்களது
பெற்றோர் (அ) காப்பாளரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பள்ளி விடுதிகளில் சேர ஜூன் 14ஆம் தேதிக்குள், கல்லூரி விடுதிகளில் சேர ஜூலை 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணாக்கர் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு துவக்க விழா நேற்று (ஜூன் 10) நடந்தது. மண்டபம் பேரூராட்சி ராஜா துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் மகேஸ்வரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் வனிதா முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண் குழு உறுப்பினர் சைவ.சரவணன், உதவி தலைமை ஆசிரியர் அக்சல்யா, ஆசிரியர்கள்
ஜெயக்குமார், இருதய ஆரோக்யமேரி, ரமேஷ் (உடற்கல்வி) இப்பணியில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் இன்று மாலை 05.30 மணி முதல் ஜூன் 12 இரவு 11.30 மணி வரை கடலில் 2.7 மீட்டர் முதல் 3.0 மீட்டர் உயரம் வரை பேரலைகள் எழும்பக்கூடும். மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசப்படும் என இந்திய வானிலை மையத்தால் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, கடற்கரையை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் மக்கள் செல்ல வேண்டாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
கமுதி அருகே உள்ள கே.பாப்பங்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுபவர் கண்ணன் (51). இவர் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றபோது மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து டிஎஸ்பி இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.