India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளை (ஏப்.19) நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்கள், பிற மாவட்டங்கள், மாநிலங்களில் வசித்து வரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஓட்டுரிமை உள்ள வாக்காளர்கள் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். வாக்களிப்பது நமது உரிமை மட்டுமின்றி கடமையும் ஆகும் என ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் கேணிக்கரை சப் இன்ஸ்பெக்டர் சபிதா ஸ்ரீ தலைமையிலான போலீசார் பேராவூர் பகுதியில் ரோந்து சென்றபோது அப்பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த கவரங்குளம் கொத்தன் மகன் கந்தசாமி (47), என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தியதில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த ரூ. 12ஆயிரத்து 500 பணம், 16 வாக்காளர் அடையாள அட்டைகள் ஜஹாங்கீர் என்பவரிடமிருந்து பறிமுதல் செய்தனர். கேணிக்கரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ராமநாதபுரம் நகரில் இன்று மதியம் பிரசார வாகனத்தில் ஊர்வலம் சென்று வாக்கு சேகரித்தார். அரண்மனை பகுதியில் துவங்கி வழிவிடும் முருகன் கோவில், வண்டிக்காரத்தெரு , சிவன் கோயில் பகுதியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இறுதி கட்ட பிரச்சாரம் மேற்கொள்வதற்கு முன்பாக பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன், முன்னாள் மாவட்ட தலைவர்
முரளி, ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் பொறுப்பாளர் GBS நாகேந்திரன், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாவட்ட செயலாளர் தர்மர், ஒன்றிய செயலாளர் முத்து முருகன் ஆகியோர் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்துக் கொண்டனர்.
கமுதி செங்கப்படையை சேர்ந்தவர் முனியசாமி (35). இவரும், இவரது உறவினர் பாண்டி (36) என்பவரும் பைக்கில் நேற்று சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சோலார் மின் உற்பத்தி மையம் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது பைக் மோதியது. இதில் முனியசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். பாண்டி படுகாயத்துடன் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்தார். பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தற்காலிகமாக கல்வி பயின்று வருகின்றனர். தங்களுக்கு கல்வி பயில அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவில்லை என்று கூறி எய்ம்ஸ் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவக் குழு விரைவில் ராமநாதபுரம் வந்து அடிப்படை கட்டமைப்புகளை மறுஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளது.
ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் கேணிக்கரை போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த பட்டினம்காத்தான் ஊராட்சி குப்பை வண்டியை சோதனையிட்டனர். அதில் 60 மது பாட்டில்கள் பதுக்கி வைத்து இருந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் ஊராட்சி தற்காலிக பணியாளர்கள் சக்கரக்கோட்டை மேல சோத்தூரணி முனீஸ்வரன் (33), டிரைவர் மகாத்மா காந்தி நகர் மதன்ராஜ் (33) ஆகியோரை கைது செய்தனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இன்று மாலை 7 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பரமக்குடியில் இன்று (ஏப்ரல் 16) பிரச்சாரம் மேற்கொண்டார். பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாநில பாஜக செயற்குழு உறுப்பினர் கதிரவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.