Ramanathapuram

News June 17, 2024

இந்தியா கூட்டணி கட்சியினருக்கு விருந்து அளித்த எம்.பி.

image

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றி பெற்று எம்.பி.யான நவாஸ் கனி இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு தனது சொந்த ஊரான குருவாடி கிராமத்தில் விருந்து அளித்தார். இதில் ராமநாதபுரம் மாவட்ட பிரதிநிதி டி.கே.குமார் கலந்து கொண்டு நவாஸ் கனி வாழ்த்து தெரிவித்தார். இந்த விருந்தில் திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

News June 17, 2024

ராம்நாடு: 3 நாளுக்கு பின் மீட்கப்பட்ட மீனவர் உடல்

image

மண்டபம் வடக்கு கடல் பகுதியிலிருந்து ஜூன் 14ல் தொழிலுக்குச் சென்ற விசைப்படகின் அடிப்பாகம் உடைந்து நடுக்கடலில் படகு மூழ்கியது. இதில் 2 மீனவர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீனவர் இருவரின் உடல்கள் ஜூன் 15ல் மீட்கப்பட்டது.
இப்படகில் சென்று மாயமான பாம்பன் மீனவர் கலீல் ரஹ்மானை மரைன் போலீசார் தேடி வந்தனர். மூழ்கிய படகின் உள்பகுதியில் சிக்கி உயிரிழந்த கலீல்
ரஹ்மான் உடல் இன்று (ஜூன் 17) மீட்கப்பட்டது.

News June 17, 2024

ராமநாதபுரம்: பக்ரீத் சிறப்பு தொழுகை

image

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் நாகநாதபுரம் வசந்தம் மகால் வளாகத்தில் உள்ள மைதானத்தில் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இதில் மாநில துணை செயலாளர் அன்வர் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News June 16, 2024

மண்டபம் மீனவர்கள் 2 நாள் வேலை நிறுத்தம்

image

மண்டபம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க நிர்வாக குழு கூட்டம் இன்று நடந்தது. தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். செயலர் ஜாகீர் உசேன் முன்னிலை வகித்தார். இதில் மண்டபம் கடலில் ஜூன் 14 தொழிலுக்குச் சென்றபோது படகு கவிழ்ந்து 3 மீனவர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, ஜூன் 17, 18ல் அனைத்து படகுகளும் தொழில் நிறுத்தம் செய்தல், 3 மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News June 16, 2024

ராம்நாடு: மின்தடை அறிவிப்பு

image

ரெகுநாதபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் ரெகுநாதபுரம், தெற்குகாட்டூர், தெற்கு வாணிவீதி கும்பரம், இருட்டூரணி, வெள்ளரி ஓடை, காரான் முத்துப்பேட்டை, பெரியபட்டினம், தினைக்குளம் வண்ணாண்குண்டு, பத்ராதரவை நயினாமரைக்கான், வள்ளிமாடன்வலசை உத்தரவை, தாதனேந்தல் பகுதிகளில் ஜூன் 18
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 16, 2024

பரமக்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

image

பரமக்குடி 2வது வார்டு புது நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மங்கள விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹாகும்பாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. மங்கள இசையுடன் நேற்று தொடங்கிய கும்பாபிஷேக விழாவானது இன்று காலை 2ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று புனித நீர் அடங்கிய குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை வலம் வந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

News June 16, 2024

மீன்பிடி‌ தடைக்காலம் முடிந்தும் மீன்களின் விலை  உயர்வு

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உழவர் சந்தையில் செயல்படும் மீன் மார்க்கெட்டில் மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் இன்றும் மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ வஞ்சிரம் மீன் 1300 ரூபாய்க்கும், சங்கரா மீன் 500 ரூபாய்க்கும், இறால் வகைகள் ரூ.400 முதல் ரூ.700 வரைக்கும், கனவாய் வகை மீன்கள் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

News June 16, 2024

வணிகர்கள் விழிப்புணர்வு கூட்டம்

image

இராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் வணிகர்கள் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. மதுரை மண்டல இணை ஆணையர் ஸ்ரீதேவி தலைமை வகித்தார். இராமநாதபுரம் வருமான அதிகாரி சந்திரசேகர், ஆலோசகர் ஆடிட்டர் திருப்பதி, இராமநாதபுரம் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் முன்னிலை வகித்தனர். நாட்டின் பொருளதார வளர்ச்சிக்கு அனைவரும் வருமானவரி செலுத்த வேண்டும் என்று மண்டல இணை ஆணையர் தெரிவித்தார்.

News June 16, 2024

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

இராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 25ம் தேதி மதியம் 3:30 மணிக்கு நடக்கிறது. இதில் முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர் தமது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

News June 15, 2024

தாம்பரம் – ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில்

image

வார இறுதி நாட்களை முன்னிட்டு தாம்பரம் – ராமநாதபுரம் – தாம்பரம்
இடையே வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து ராமநாதபுரத்திற்கு ஜூன் 21, 23, 28, 30, ஜூலை 5,7,12,14,19,21,26,28(வெள்ளி, ஞாயிறு இரவு 7 மணி), மறுமார்க்கத்தில் ஜூன் 22, 24, 25, ஜூலை 1,6,8,13,15,20,22,27,29ல்(சனி, திங்கள் மாலை 3 மணி) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே இன்று(ஜூன் 15) அறிவித்துள்ளது.

error: Content is protected !!