India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனுஷ்கோடி தெற்கு கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக படகுகளுடன் நுழைந்த இருவரை மரைன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இலங்கை, புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜூனியாஸ் பிராண்டன், ஜூட் ஆண்டனி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் காற்றின் காரணமாக திசைமாறி வந்தார்களா (அ) கடத்தல் பொருட்கள் ஏதேனும் கொண்டு வந்தார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெறுகின்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இடிந்து விழும் நிலையில் மேற்கூரைகள் பெயர்ந்து, தூண்கள் உடைந்து உயிர்ப்பலி வாங்க காத்திருந்த இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்களில், பணிக்கு வருபவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி வருவது தொடர்பாக வே டூ நியூஸ் ல் கடந்த 03.06.24 அன்று செய்தி வெளியிட்டது. இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் வேலி அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
திருவாடானை தாசில்தாராக பணியாற்றிய கார்த்திகேயன் ஆர்.எஸ். மங்கலம் நில எடுப்பு தாசில்தாராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனி வட்டாட்சியராக பணியாற்றிய ஜி.ஆர். அமர்நாத் திருவாடானை தாசில்தாராகவும் நியமித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் இன்று
(ஜூன் 20) உத்தரவிட்டுள்ளார்.
தென்கடல் மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 35 – 45 கி.மீ. வேகத்திலும், இடையில் 55 கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜூன்.23 வரை 4 நாள்கள் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் (ராமேஸ்வரம்) தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று ராகுல் காந்தி எம்பி-யின் 54வது பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தியின் பிறந்தநாளை தேவிபட்டினம் சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி வட்டார தலைவர் காருகுடி சேகர் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் வட்டார துணை தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரத்தில் அரசு அலுவலகங்கள், வங்கிகள், மற்றும் பொதுமக்கள் பலர் பி.எஸ்.என்.எல் சேவையை பயன்படுத்துகின்றனர். கடந்த சில நாட்களாக பி.எஸ்.என்.எல்
நெட்ஒர்க் சேவை இடையிடையே துண்டிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் அலைபேசியில் அவசரத் தேவைக்கு தொடர்பு கொள்ளமுடியாமல் சிரமடைந்து வந்தனர். இந்நிலையில் பி.எஸ்.என்.எல் இணைய சேவை இன்றும் பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் ஜூன் 21ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில், 10ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, முதுகலை பட்டம் பெற்ற வேலைநாடுநர்கள் பங்கேற்று தங்கள் தகுதிக்கேற்ற வேலையை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி, ஜூலை 2 ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில், 4 தமிழக மீனவர்களையும் இலங்கை போலீஸார் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
திருவாடானை தாலுகா பதனக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் அமுதா.இவர் பதிவு மூப்பு அடிப்படையில் வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.மேலும் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் இவர் ஒருவர் மட்டுமே வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரை திருவிழா மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 3 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.