India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதுகுளத்தூர் புளியங்குடியைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன்(24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை 2021இல் திருமணம் செய்வதாக கூறி கர்ப்பம் ஆக்கினார். சிறுமியின் தந்தை புகாரின்படி முதுகுளத்தூர் போலீசார் போக்சோ வழக்கில் கோகுல கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ராமநாதபுரம் மகிளா கோர்ட் நீதிபதி கோபிநாத் மேற்கண்ட கோகுல கண்ணனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
தேவர் ஜெயந்தி விழாவுக்கு செல்லும் வாகனங்களுக்கு ஒரு வாரம் முன்பே பாஸ் வழங்கக் கோரி மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கமுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் தொடர்ந்த வழக்கில் டிஜிபி, ராமநாதபுரம் ஆட்சியர் மற்றும் எஸ்.பி. பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(அக்.17) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழக்கரை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு மானியம் விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில மாதங்களாக கொள்முதலில் ஏற்பட்ட சிக்கலால் பருப்பு, கோதுமை ஆகிய பொருள்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட முடியாத சூழ்நிலை உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் சிறப்புத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேற்று (அக்.16) மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு, அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை சின்னக்கண்ணு DSP தலைமையில் காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் எனும் சிறப்பு திட்டம் இன்று நடந்தது. அரசு மேல்நிலைப்பள்ளி ஆதிதிராவிடர் மாணவர் விடுதி மாணவர்களுக்கு வழங்கவுள்ள உணவுப்பொருட்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டார். உடன், உதவி ஆட்சியர் (பயிற்சி) முகமது இர்பான் இருந்தார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(அக்.16) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம்நாடு மாவட்டம் தேவிபட்டினம் முனியசாமி என்பவரிடம் அவரின் தொழிலை மேம்படுத்த ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆவண செலவாக ரூ.14 லட்சம் வாஙகியுள்ளார். ஆனால் கடன் வாங்கி தராமல், தான் பெற்ற பணத்திற்காக போலி செக் கொடுத்து ஏமாற்றியதாக ராமநாதபுரம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். விசாரணைக்கு நேற்று பவர் ஸ்டார் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி வழக்கினை நவ.,15-க்கு ஒத்திவைத்தார்.
நடிகை கவுதமியின் உதவியாளரான பைனான்சியர் அழகப்பன், கவுதமிக்கு முதுகுளத்தூரில் நிலம் வாங்கி தருவதாக ரூ.3.16 கோடி ஏமாற்றினார். இது குறித்த புகாரில் ராமநாதபுரம் நில மோசடி தடுப்பு போலீசார் அழகப்பனை கைது செய்தனர். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அழகப்பனின் மேலாளர் மதுரை ரமேஷ் சங்கர்(55) என்பவரையும் கைது செய்த நிலையில் அவரை காவலில் எடுத்து மதுரையில் உள்ள வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
Sorry, no posts matched your criteria.