Ramanathapuram

News June 23, 2024

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

image

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை 3 விசைப்படகுடன் இலங்கை கடற்படை இன்று அதிகாலை சிறை பிடித்துச் சென்றது. இது தொடர்பாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இலங்கை கடற்படை கைது செய்த 22 மீனவர்களை
உடனடியாக விடுதலை செய்யக்கோரி நாளை வேலைநிறுத்தம் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. போராட்டத்தில் 4000க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர் பங்கேற்க உள்ளனர்.

News June 23, 2024

இராமநாதபுரத்தில் 131 மிமீ மழை பொழிவு பதிவு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி
திருவாடானை 54.20,
தொண்டி 39.20,
வட்டாணம் 17.80,
தீர்த்தாண்ட தானம் 15.40, கடலாடி 4.40 மிமீ என மாவட்டம் முழுவதும்
131 மிமீ மழை பெய்துள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

News June 22, 2024

2 ஆண்டுகளில் ரூ.17.24 கோடி கடனுதவி

image

ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் சார்பில் கடந்த 2022 ஏப்ரல் 1 முதல் 2024 மார்ச் 31 வரை அரசின் நலத்திட்டங்களின் கீழ் ரூ.7.93 கோடி மானியத்துடன் ரூ.30.05 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதில் 50 இளையோருக்கு ரூ.17 கோடியே 24 லட்சத்து 16 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது. இதில் ரூ.4 கோடியே 31 லட்சத்து 4 ஆயிரம் மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

News June 22, 2024

ராமநாதபுரம்: இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (ஜூன் 22) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, ராமநாதபுரம் உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

News June 22, 2024

இராமேஸ்வரம் பள்ளிகளில் ஆட்சியர் ஆய்வு

image

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் இராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து நேற்று காலை ஆய்வு செய்தார். அப்போது இராமேஸ்வரம், தங்கச்சிமடம் பள்ளிகளில் வகுப்பறைகளை பார்வையிட்ட ஆட்சியர், மாணவ, மாணவிகளிடம் பாடங்கள் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

News June 22, 2024

இலங்கை காவலர் மீதான வழக்கு ஒத்தி வைப்பு

image

இலங்கை போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் திருடி கடந்த 2020ஆம் ஆண்டு தப்பி வந்து, தனுஷ்கோடியில் இலங்கை போலீஸ்காரர் பிரதீப்குமார் பண்டாரா (34) கைதானார். திருச்சி முகாமில் தங்கி உள்ள இவர் மீதான வழக்கு ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் நேரில் ஆஜரான நிலையில் இதை விசாரித்த நீதிபதி குமரகுரு வழக்கினை அடுத்த மாதம் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

News June 21, 2024

ராம்நாடு: மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

ராமநாதபுரம் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் ராமநாதபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் சகர்பான் தலைமையில் ஜூன் 25ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் ராமநாதபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ராமநாதபுரம் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் சகர்பான் தெரிவித்துள்ளார்.

News June 21, 2024

கணவரின் உடலை கேட்டு மனைவி மனு

image

ராமநாதபுரம் வடக்கு மல்லல் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் சவுதி அரேபியாவில் ஓட்டுநராக பணி புரிந்த போது திடீரென உயிரிழந்துள்ளார். அவரின் உடலை ராமநாதபுரம் கொண்டுவர மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரனிடம் மனைவி ஜெயராணி கோரிக்கை மனு அளித்தார். மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த போது மனைவி ஜெயராணி கதறி அழுது, துக்கம் தாங்காமல் மயக்கம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News June 21, 2024

திருநங்கைகளுக்கு இலவச பட்டா வழங்கிய ஆட்சியர்

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகையின் கீழ் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு, திருநங்கைகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் 10 திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.

News June 21, 2024

சமையல் எரிவாயு குறைதீர்க்கும் கூட்டம்

image

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு முகவர்களின் குறைதீர்க்கும் கூட்டம் ஜூன் 27-ம் தேதி மாலை 5 மணிக்கு வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான கோரிக்கைகளை நேரில் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!