Ramanathapuram

News June 28, 2024

ராம்நாடு: விவசாயி மகனுக்கு எஸ்பி பாராட்டு

image

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே குயவனேந்தலைச் சேர்ந்த விவசாயி கருப்பையா என்பவரது மகன் கேசவன் (23) இயற்பியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்ற கேசவன் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சிபெற்று டிஎஸ்பி பணிக்கு தேர்வானார். இவர் தனது தந்தையுடன் ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷை சந்தித்து நேற்று வாழ்த்து பெற்றார். குயவனேந்தல் கிராமத்திற்கு பெருமை சேர்த்த கேசவனுக்கு பாராட்டு குவிகிறது.

News June 28, 2024

ராம்நாட்டில் நேரடி கொள்முதல் நிலையம்: அறிவிப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் அர.சக்கரபாணி சட்டமன்றத்தில் நேற்று அறிவித்தார். கொள்முதல் நிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். மற்றொரு அறிவிப்பில், ராம்நாட்டில் புதிய வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்கள் கட்டப்படும் என்றார்.

News June 27, 2024

மத்திய அமைச்சரிடம் எம்.பி கோரிக்கை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலைய பணிகளை விரைந்து துவங்கிட வேண்டும், மலேசியா, பினாங்கு மற்றும் சவுதி அரேபியா, ரியாத்திலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையை துவங்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிடம், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.

News June 27, 2024

காத்திருப்பு கூடம் கட்டுமான பணி: ராம்நாடு கலெக்டர் ஆய்வு

image

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ரூ.1.56 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுவரும் மக்கள் நிரந்தர காத்திருப்பு கூடம் கட்டுமான பணியை கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேற்று (ஜூன் 26) ஆய்வு செய்தார். உதவி ஆட்சியர் (பயிற்சி) மொகத் இர்பான், தாசில்தார் சேதுராமன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன் உடனிருந்தனர்.

News June 26, 2024

பெண் கொலை: நிவாரணம் கோரி முதல்வருக்கு மனு

image

பரமக்குடியை சேர்ந்த மேகலா என்பவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் முதல் கணவரை பிரிந்து மணிகண்டன் என்பவரை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் மேகலாவை குத்தி கொன்றார். மேகலாவின் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம், படிப்பு செலவை அரசு ஏற்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினர்.

News June 26, 2024

போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

image

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு துவக்கி வைத்தார். மாணாக்கர் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர். எஸ்பி சந்தீஷ், கோட்டாட்சியர் ராஜ மனோகரன், கலால் உதவி ஆணையர் சாந்தி, மதுவிலக்கு டிஎஸ்பி ரமேஷ், கோட்ட ஆய அலுவலர் முருகேசன் பங்கேற்றனர்.

News June 26, 2024

ராமநாதபுரம்: எரிவாயு முகவர் குறைதீர் கூட்டம்

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு முகவர்களுடன் மாதாந்திர குறைதீர் கூட்டம் நாளை (ஜூன் 27) மாலை 5 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் தாலுகா மக்கள் தங்களின் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

News June 26, 2024

ராம்நாடு கலெக்டரிடம் செவிலியர் மனு

image

தமிழகம் முழுவதும் உள்ள துணை சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் துறை கிராம/பகுதி/சமுதாய செவிலியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் நிர்மலா, கோமதி, தமிழ்ச்செல்வி, ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் நேற்று (ஜூன் 25) மனு அளித்தனர்.

News June 25, 2024

ராமநாதபுரத்தில் 3 பேர் உயிரிழப்பு

image

ராமநாதபுரம், வாலிநோக்கம் சேர்ந்த முஹம்மது மாலிக், மனைவி குடும்பத்தாருடன் குற்றாலம் சென்று விட்டு இன்று மாலை வீடு திரும்பியபோது புஞ்செய் எனும் இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மாமியார், இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மாலிக், மனைவி, ஒரு குழந்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், சாயல்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News June 25, 2024

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கீழ் இயங்கும் 83000-31100 10581என்ற எண்கள் மூலமாக தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படுவதுடன் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!