Ramanathapuram

News June 30, 2024

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜூன் 30) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியல் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News June 30, 2024

ராமநாதபுரம் கலெக்டர் ஆய்வு

image

ராம்நாடு: திருப்புல்லாணி அருகே பெரியபட்டினம் ஊராட்சியில் 5.75 ஏக்கர் பரப்பில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கான மினி ஸ்டேடியம் ரூ.3 கோடி மதிப்பில் அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் விஷ்ணு சந்திரன் இன்று (ஜூன்.30) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

News June 30, 2024

தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு புனித அந்திரேயா பெண்கள் பள்ளியில் நாளை முதல் ஜூலை 31 ந்தேதி வரை நடைபெறவிருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாறுதல் கேட்கும் விண்ணப்பத்துடன் இதில் பங்கேற்கலாம் என மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

News June 29, 2024

நூதன மோசடி – ரூ.17 லட்சம் மீட்பு

image

ராமநாதபுரத்தை சேர்ந்த மெகர் பானு(45) என்பவருக்கு ஒரு குறிப்பிட்ட செயலில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என குறிச்செய்தி வந்துள்ளது. அதில் அவர் ரூ.33 லட்சம் வரை முதலீடு செய்து ரூ.1 கோடி லாபம் அடைந்ததாக கூறப்படுகிறது. அதை எடுக்க முயன்ற போது மேலும் ரூ.50 லட்சம் செலுத்துமாறு கூறியுள்ளனர். இதில் சந்தேகமடைந்த அவர் புகார் அளித்ததில் போலீசார் வங்கி கணக்கை முடக்கி ரூ.17 லட்சத்தை மீட்டுள்ளனர்.

News June 29, 2024

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: ஆட்சியர் தகவல்

image

ஜூலை 18ஆம் தேதியை தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் வெற்றிபெறும் மாணாக்கருக்கு ரூ.10,000, ரூ.7000, ரூ.5000 என முதல் 3 பரிசு, பாராட்டுச் சான்று வழங்கப்பட உள்ளது. போட்டி தலைப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

News June 28, 2024

ராம்நாடு: விவசாயி மகனுக்கு எஸ்பி பாராட்டு

image

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே குயவனேந்தலைச் சேர்ந்த விவசாயி கருப்பையா என்பவரது மகன் கேசவன் (23) இயற்பியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்ற கேசவன் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சிபெற்று டிஎஸ்பி பணிக்கு தேர்வானார். இவர் தனது தந்தையுடன் ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷை சந்தித்து நேற்று வாழ்த்து பெற்றார். குயவனேந்தல் கிராமத்திற்கு பெருமை சேர்த்த கேசவனுக்கு பாராட்டு குவிகிறது.

News June 28, 2024

ராம்நாட்டில் நேரடி கொள்முதல் நிலையம்: அறிவிப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் அர.சக்கரபாணி சட்டமன்றத்தில் நேற்று அறிவித்தார். கொள்முதல் நிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். மற்றொரு அறிவிப்பில், ராம்நாட்டில் புதிய வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்கள் கட்டப்படும் என்றார்.

News June 27, 2024

மத்திய அமைச்சரிடம் எம்.பி கோரிக்கை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலைய பணிகளை விரைந்து துவங்கிட வேண்டும், மலேசியா, பினாங்கு மற்றும் சவுதி அரேபியா, ரியாத்திலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையை துவங்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிடம், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.

News June 27, 2024

காத்திருப்பு கூடம் கட்டுமான பணி: ராம்நாடு கலெக்டர் ஆய்வு

image

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ரூ.1.56 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுவரும் மக்கள் நிரந்தர காத்திருப்பு கூடம் கட்டுமான பணியை கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேற்று (ஜூன் 26) ஆய்வு செய்தார். உதவி ஆட்சியர் (பயிற்சி) மொகத் இர்பான், தாசில்தார் சேதுராமன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன் உடனிருந்தனர்.

News June 26, 2024

பெண் கொலை: நிவாரணம் கோரி முதல்வருக்கு மனு

image

பரமக்குடியை சேர்ந்த மேகலா என்பவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் முதல் கணவரை பிரிந்து மணிகண்டன் என்பவரை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் மேகலாவை குத்தி கொன்றார். மேகலாவின் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம், படிப்பு செலவை அரசு ஏற்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினர்.

error: Content is protected !!