Ramanathapuram

News July 5, 2024

ராமநாதபுரம்: அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டத்தை, ஊரகப்பகுதிகளில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

News July 3, 2024

வண்டல், களிமண் எடுக்க விண்ணப்பம்; கலெக்டர் தகவல்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயப் பணி, மண்பாண்ட தொழிலுக்கு வண்டல், களிமண் எடுக்க 1,128 கண்மாய், ஊரணிகளின் பட்டியல்கள் மாவட்ட அரசிதழில் வெளியீடபட்டுள்ளது.
இதன்படி வண்டல், களிமண் எடுக்க விரும்பும் விவசாயிகள், மண் பாண்ட தொழிலாளர்கள் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

News July 3, 2024

குழந்தைகளுக்கு நன்கொடை அளிக்க ஆட்சியர் வேண்டுகோள்

image

மத்திய அரசு குழந்தைகளுக்காக மிஷன் வாத்சல்யா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கி முகவரியில் பணம் செலுத்தலாம் என ராமநாதபுரம்  ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
Bank of Maharashtra, A/C: Ramanathapuram, District Orphan child, A/C No: 60488699946, IFSC code: MAHB0002134, MICR Code: 623014002. 

News July 3, 2024

மீனவர்கள் கைது – திருமாவளவன் கண்டனம்

image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மத்திய அரசு உடனடியாக மீட்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்களாகவே கருதுவதில்லை. முதல்வரின் கடிதத்திற்கு மத்திய அரசு செவி சாய்ப்பதாக தெரியவில்லை” என குற்றம்சாட்டியுள்ளார்.

News July 3, 2024

ராமநாதபுரம் கலெக்டர் அழைப்பு

image

தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர் சேர்ப்பு சிறப்பு முகாம் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மீனவ கிராமங்களில் ஜூலை 8 முதல் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி, அதனைச் சார்ந்த தொழிலாளர்கள், மீனவர் மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர் அனைவரும் மீனவர் நல வாரிய உறுப்பினராக சேர்ந்து பயன்பெறலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

News July 2, 2024

இராம்நாடு: புகார் எண் அறித்த கலெக்டர்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் குற்றவாளிகள் குறித்தும் கள்ளச்சாராயம் காய்ச்ச முயற்சி செய்பவர்கள் குறித்து, குற்றத்தை தடுக்கும் பொருட்டு காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுப்பதற்காக கட்டணமில்லா தொலைபேசி மூலமாக 8300175888 என்ற எண்ணை எந்த நேரமும் (24X7) தொடர்பு கொண்டு தகவல்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.

News July 2, 2024

ராமநாதபுரம் மீனவர்கள் போராட்டம்

image

பாம்பன், நம்புதாளையில் இருந்து சென்ற 25 நாட்டுப்படகு மீனவர்களை நேற்று இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில், 25 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்காவிடில் 5ஆம் தேதி பாம்பன் பாலம் முற்றுகையிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

News July 2, 2024

எல்லை தாண்டிய மீனவர்கள் – சிறை

image

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தனுஷ்கோடி, பாம்பன், நம்புதாளை பகுதிகளைச் சேர்ந்த 4 நாட்டு படகுகளுடன் 25 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று அதிகாலை சிறை பிடித்துச் சென்றது. எல்லை தாண்டிய வழக்கில் கைதான ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கு ஜூலை 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து ஊர்காவல்த்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News July 1, 2024

ராம்நாடு: குடிநீர் விநியோகம் ரத்து

image

திருச்சி, முக்கொம்பு கதவணை சரி செய்யும் பணி பொதுப்பணி துறை மூலம் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் பிரதான கிணறுகளில் நீரூற்று குறைந்ததால், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒதுக்கிய அளவு குடிநீர் ஏற்றும் பணி நடைபெறுகிறது. இதனால் இன்றும் நாளையும் (ஜூலை 1, 2) மாவட்டம் முழுவதும் குடிநீர் விநியோகம் இருக்காது என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

News July 1, 2024

ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேர் கைது

image

ராமேஷ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றவர்களை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதில், எல்லை தாண்டியதாக 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, அவர்களது 4 படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!