Ramanathapuram

News July 11, 2024

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி

image

அம்பேத்கர், கருணாநிதி பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணாக்கருக்கு ஜூலை 18, 19 இல் பேச்சுப் போட்டி முஹமது சதக் தஸ்தகீர் பி.எட்., கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற உள்ளது.
இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 3 பரிசுகள் வழங்கப்படஉள்ளது. இதில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர் இருவருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

News July 11, 2024

இந்திய விமானப்படைக்கு வீரர்கள் தேர்வு

image

இந்திய விமானப்படை அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆள்சேர்ப்பு முகாம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ளது. இதில் தகுதிவாய்ந்த திருமணம் ஆகாத ஆண், பெண்கள் ஜூலை.28 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

News July 10, 2024

7,377 மெட்ரிக் டன் உரம் இருப்பு

image

ராமநாதபுரத்தில் நடப்பாண்டில் சம்பா பருவத்தில் நெல், சிறுதானியம், எண்ணெய் வித்துக்கள் 1 லட்சத்து 85 ஆயிரம் எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட உள்ளது. இதில் 2 ஆம் போக சாகுபடி 540 எக்டேர் பரப்பில் நடைபெற்று வருகிறது. இதில் 7,377 டன் உரங்கள் இருப்பபில் உள்ளது. உரம் விற்பனை செய்யும் போது ஆதார் பெற்று ரசிது வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 9, 2024

ராமநாதபுரம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தெற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் 55 கிமீ வேகத்தில் காற்றுவீசும். அதேபோல் தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக் கடல், மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடலில் சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

News July 9, 2024

ராம்நாடு: அரசு ஐடிஐகளில் நேரடி சேர்க்கை நீட்டிப்பு

image

ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி அரசு ஐடிஐ-களில் அரசு ஒதுக்கீடு இடங்களில் 2024-25ம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை ஜூலை 15 வரை நீட்டிக்கப்பட்டு ஓராண்டு, ஈராண்டு தொழிற்பிரிவுகளுக்கு மாணவர் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. இதில் சேர விரும்புவோர் மதிப்பெண், சாதி சான்றிதழ், டிசி, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ, மின்னஞ்சல் முகவரியுடன் நேரில் சென்று சேரலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News July 8, 2024

ராம்நாடு கலெக்டர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு

image

இராமநாதபுரம் ஆட்சியர் விஷ்னு சந்திரன் பெயரில் போலி பேஸ்புக் ஐடி உருவாக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் விஷ்னு சந்திரன் தெரிவித்துள்ளர். அவர் தெரிவித்தாவது, போலி பேஸ்புக் ஐடி தொடங்கியவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடபட்டுள்ளது. அதன் செயல்பாட்டையும் தடை செய்யவும் பரிந்துரைக்கபட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் பேஸ்புக் ஐடியை பின்தொடர வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

News July 8, 2024

விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

image

ராமேஸ்வரம் மீனவர்கள் பிடித்து வரும் இறால் மீன்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும், அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும், தனியார் நிறுவனங்களின் சிண்டிகேட் முறையை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் (ஜூலை.8) கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

News July 6, 2024

ராமநாதபுரம்: அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 யூனியனில் 76 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் கூட்ட நெரிசலை குறைத்திடும் வகையில் இருக்கைகள் அமைத்திடவும். பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக வசதிகள் செய்திடவும், இன்டர் நெட் வசதி தொய்வின்றி கிடைத்திடவும் அப்பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

News July 5, 2024

ராமநாதபுரம்: அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டத்தை, ஊரகப்பகுதிகளில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

News July 3, 2024

வண்டல், களிமண் எடுக்க விண்ணப்பம்; கலெக்டர் தகவல்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயப் பணி, மண்பாண்ட தொழிலுக்கு வண்டல், களிமண் எடுக்க 1,128 கண்மாய், ஊரணிகளின் பட்டியல்கள் மாவட்ட அரசிதழில் வெளியீடபட்டுள்ளது.
இதன்படி வண்டல், களிமண் எடுக்க விரும்பும் விவசாயிகள், மண் பாண்ட தொழிலாளர்கள் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!