Ramanathapuram

News July 15, 2024

37 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெரும் திருவிழா

image

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள செட்டி அய்யனார் ஆலய வருடாபிஷேக விழா மற்றும் குதிரை எடுப்பு விழா இன்று நடைபெற்றது. 37 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்ற விழாவில் மண் குதிரைகளை தலையில் சுமந்து கிராம மக்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். அதன் பின்பு அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

News July 15, 2024

பாம்பன் மீனவர்கள் காவல் நீட்டிப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பனில் இருந்து கடந்த 1 ஆம் தேதி எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 4 நாட்டு படகுகள், 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அதன்பின்னர் ஊர்க்காவல்துறை நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர்களை யாழ்பாணம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் 25 மீனவர்களின் காவலை ஜீலை.29 வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News July 15, 2024

இலங்கை கடற்படை அச்சுறுத்தல்

image

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கச்செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றதையடுத்து நேற்று முன்தினம்(ஜூலை.13) 400 க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர்.நடுக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது அங்கு 5 இலங்கை ரோந்து கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் மீனவர்கள் குறைவான மீன்களுடன் கரை திரும்பினர்.

News July 14, 2024

குரூப் 1 தேர்வில் 1382 பேர் ஆப்சென்ட்

image

ராமநாதபுரம் தமிழகத்தில் அரசுப்பணியாளர்கள் தேர்வணையம் மூலம் குரூப் 1 தேர்வில் முதல்நிலைத் தேர்வு நேற்று 14 மையங்களில் நேற்று நடைபெற்றது. 14 மையங்களில் தேர்வர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. இதில் தேர்வு எழுத 4385 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 3003 பேர் தேர்வு எழுதிய நிலையில் 1382 பேர் தேர்வு எழுத வரவில்லை.

News July 13, 2024

பரமக்குடியில் ரூ.52 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

image

பரமக்குடி காந்திநகர் செக் போஸ்ட் அருகே போலீசார்கள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது இளையான்குடியை சேர்ந்த பிரபாகரன் என்பவரது வாகனத்தை சோதனை செய்த பொழுது அவரது பையில் 52 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் வைத்திருந்தார். பணத்தை மீட்டு எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த போலீசார்கள் விசாரணை செய்ததில் மூன்று பேரை கைது செய்தனர்.

News July 13, 2024

ராமேஸ்வரம் கோவில் மோசடி விசாரணை ஒத்திவைப்பு

image

ராமேஸ்வரம் கோவில் ஊழியர்களின் சேமநலநிதி கணக்கில் ரூ.1கோடி மோசடி நடந்தது. சிபிசிஐடி போலீசார் இணை ஆணையர் செல்வராஜ், கணினி ஆபரேட்டர் சிவனருள்குமரன், அவரின் தந்தை கோபால், கணக்கர் ரவீந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் 4 பேர் மீதான விசாரணை நேற்று ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் வந்தது. விசாரணை நடத்திய நீதிபதி ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

News July 13, 2024

7 மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

image

தூத்துக்குடி கடலோர காவல்படையினர் கடந்த மாதம் எல்லை தாண்டி வந்த இலங்கை படகை பறிமுதல் செய்து மீனவர்கள் 7 பேரை கைது செய்தனர். பின்னர், ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று வந்தது. அதில் 7 பேருக்கும் வரும் ஜூலை 26ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு வழங்கி நீதிபதி மோகன்ராம் உத்தரவிட்டார்.

News July 12, 2024

ராமநாதபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

ராமநாதபுரம்: பிரப்பன்வலசை, தெற்குவாடி , கீழ்க்குடி, கலையூர், செங்கற்படை, மாரந்தை , ஆலங்குளம், பகவதிமங்கலம் ஆகிய இடங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நாளை (13/7/24) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் ரேஷன் கார்டுகளில் பிழைதிருத்தம் , பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம், புதிய, நகல் ரேஷன் கார்டு கோரி மனு அளித்து பயன் பெறலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

News July 12, 2024

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 5 மணி வரை ) ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 12, 2024

சிறப்பு மருத்துவரை நியமிக்க உத்தரவு

image

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தினமும் 1000 க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அங்கு செயல்படும் தலைக்காய சிகிச்சைப் பிரிவுக்கு சிறப்பு மருத்துவா் பணியிடத்தை நிரப்பக் கோரி கலந்தா் ஆசிக் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்தார். தலைக்காய சிகிச்சைப் பிரிவுக்கு 2 மாதங்களுக்குள் சிறப்பு மருத்துவரை தமிழகஅரசு நியமிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.

error: Content is protected !!