India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள்<
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். ராமநாதபுரத்தை சேர்ந்த 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டு சம்பா பருவத்தில் நெல், பயறு வகைகள். எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள், தேட்டக்கலை பயிர்கள் 1 லட்சத்து 85 ஆயிரம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட உள்ளது. இதற்கு தேவையான 7377 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட்,காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தி அதிகலாபம் பெறலாம் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடலில் காற்றின் வேகம் 45 முதல் 55 வரையிலும் அதிகபட்சமாக 65 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் யாரும் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், ராமநாதபுரம் மாவட்ட அமமுக இளைஞர் பாசறை மாவட்ட செயலர் மண்டபம் எம்.ஏ. பக்கர், அதிமுகவில் இன்று மீண்டும் இணைந்தார். இந்நிகழ்வில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலர் முனியசாமி, மண்டபம் பேரூர் செயலர் சீமான் மரைக்காயர் ஆகியோர் உடனிருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சிம்ரன்ஜீத் சிங் IAS புதிய ஆட்சியராக இன்று(ஜூலை 16) நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த வந்த விஷ்ணு சந்திரன் IAS மாற்றப்பட்டு சிம்ரன்ஜீத் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நகராட்சி நிர்வாகத்தின் கூட்டு ஆணையராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் கூறியதாவது:இந்தாண்டு ஜனவரி முதல் இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.மாதத்திற்கு தலா 10 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன.முதுகுளத்துார்,கமுதி,மண்டபம்,ராமநாதபுரம் பகுதிகளில் அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடத்த முயற்சிக்கின்றனர்.தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
ராமநாதபுரம் வட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சி OVS மஹால், கமுதி வட்டம் ராமலிங்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் போகலூர் வட்டம் முத்து செல்லாபுரம் சமுதாயக்கூடம் ஆகிய பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நாளை காலை 10 மணி முதல் மதியம் 3 மணிவரை நடைபெற இருக்கிறது. இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை ராமநாதபுர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.