India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் அருகே உள்ள அச்சுந்தன் வயல் பகுதியைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டி (55). இவர் நேற்று மாலை கூரியூர் ரயில்வே கேட் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது தண்டவாள பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை விரட்ட முயன்றார். அப்போது மதுரையிலிருந்து மண்டபம் நோக்கி சென்ற திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி செந்தூர்பாண்டி உடல் துண்டாகி பலியானார். ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் போட்டித் தேர்விற்கு, விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டணமின்றி பயிற்சி வழங்கப்படுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு பெற்ற அலுவலர்கள் பங்கேற்று பயிற்சி வழங்கி வருகிறார்கள். இன்று குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காந்திநகர் பகுதியில் வசிப்பவர் கார்த்திகைராஜா, இவரது மனைவி சிந்துபிரியா (36). இவர் உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவ்வப்போது சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயர் ரத்த அழுத்தம் அதிகமாகி மயங்கி விழுந்ததில் உயிரிழந்தார். இது குறித்து அவரது தாயார் கஸ்தூரி (62) பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.09) நண்பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும். கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியா சிலாங்கூர் மாகாணத்தில் நடந்த இன்டர்நேஷனல் கராத்தே போட்டியில் கோஜுரியோ வேர்ல்ட் கராத்தே டூ சோப்புக்காய் சார்பாக இந்திய தலைமை பயிற்சியாளர் டாக்டர் சுரேஷ்குமார் தலைமையில் வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் நரிப்பையூர் மாணவர் ஜெகதீஷ் பிரதீப் தங்கம், வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். மாணவனை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சென்சாய் முத்துராஜா, பொதுமக்கள் பாராட்டினர்.
ஆர்.எஸ்.மடை கிராமத்தில் உள்ள தோட்டத்தில் வெள்ளரி பறிப்பதற்காக ஆட்டோ டிரைவர் பாண்டி இன்று (மே 8) சென்றபோது கடும் வெயில் சுட்டெரித்த நிலையில் அதிக வெப்பத்தின் காரணமாக தோட்டத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது பரிசோதித்த மருத்துவர் வரும் வழியில் பாண்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளுக்கு மே 31, நாட்டுப்படகுகளுக்கு
ஜூன் 11ல் நேரடி ஆய்வு செய்யப்படவுள்ளது. இந்த 2 நாட்களில் ஆய்வுக் குழுவினரிடம் விசைப்படகு, நாட்டுப்படகு உரிமையாளர்கள் அனைத்து ஆவணங்களையும் தவறாமல் நேரடியாக காண்பிக்க வேண்டும் என மண்டபம் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
ராமநாதசுவாமி கோயிலிலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது லட்சுமண தீர்த்தம். இதனை சுற்றி சீதா தீர்த்தம், பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோவில், தண்ணீரில் கல் மிதக்கும் இடங்கள் அமைந்துள்ளன. ராமநாதபுரத்தில் 64 தீர்த்த குளங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. புராணக் கதைகளைத் தழுவிய இத்தலத்தில் இலட்சுமண தீர்த்தம் இலட்சுமனேஸ்வரர் பெயரில் சிவன் கோவில் ஒன்று அமைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.