India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குநர் கண்ணையா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், வேளாண் சார்ந்த தொழில் தொடங்க வங்கி கடன் உதவியுடன் ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு 21-40 வயக்குட்பட்டோர் வேளாண்மைத்துறையின் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 23.7.24 காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ராமநாதபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ராமநாதபுரம் கோட்ட மின் நுகர்வோர் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என ராமநாதபுரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சகர்பான் தெரிவித்துள்ளார்.
மதுரை மத்திய சிறையில் காலியாக உள்ள நெசவு ஆசிரியர், கொதி கலன் உதவியாளர், பரமக்குடி மகளிர் கிளை சிறயில் தூய்மை பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்க 18 – 32 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் கல்வி, ஜதி, பிற சான்றிதல் நகலுடன் மத்திய சிறை சாலை, மதுரை 625016 என்ற முகவரிக்கு ஆக.16 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக நேற்று பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1 -ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதன்காரணமாக 4 ஆவது நாளாக ராமேசுவரம், பாம்பன், தனிஷ்கோடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட விசை படகுகள், 1500 க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகள் மீன் பிடிக்கச்செல்லாமல் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் கலெக்டராக விஷ்ணு சந்திரன் பணியாற்றி வருகிறார். தற்போது பணி மாறுதல் ஆணை வந்துள்ளது. இந்நிலையில், இன்று அவர் கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில், இராமநாதபுரம் மக்கள் (ம) அனைத்து துறை அலுவலர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இங்கு கடந்த 1 வருடம் 2 மாதம் பணிபுரிந்துள்ளேன். பணிபுரிந்த காலத்தில் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து துறை அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை.23, ஆகஸ்ட்.4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் தொழிலாளர்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 2 குழந்தை தொழிலாளர்கள், 7 வளர் இளம்பருவ தொழிலாளர்கள் மீட்க பட்டனர். இவர்களை பணியில் ஈடுபடுத்திய உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், 18 வயதிற்குட்பட்ட சிறார்களை பணி அமர்த்தினால் ரூ.50,000 அபராதம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் உச்சிப்புளியில் 2015 இல் போலீசார் வாகன சோதனையில் 75 சயனைடு குப்பிகள், 600 கிராம் சயனைடு, ரூ.46,200, 1 பவுன் தங்க நகை, 4 ஜி.பி,எஸ், 9 செல்போனை பறிமுதல் செய்து ஸ்ரீரஞ்சன் என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் தொடங்க திட்ட மிட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் ஸ்ரீரஞ்சனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நேற்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை மூன்று இடங்களில் நடைபெற உள்ளது. இராமநாதபுரம் வட்டம் பட்டணங்காத்தன் கிங்க் பேலஸ் மஹால், முதுகுளத்தூர் வட்டம் தேரிருவேலி பள்ளிவாசல் மஹால், ஆர்எஸ்மங்கலம் வட்டம் சோழந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டம் நாளை (19/07/24) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்னுசந்திரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.