Ramanathapuram

News October 20, 2024

ராம்நாடு தொ.உ.மீ. குழுவின் புதிய நிர்வாகி நியமனம்

image

இராமநாதபுரம் மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளராக ஏனாதியை சேர்ந்த வெற்றிமுருகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்‌. நியமனம் செய்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும் பரிந்துரை செய்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மாவட்ட செயலாளர் தர்மருக்கும் நன்றி தெரிவித்தார்.

News October 20, 2024

ராமநாதபுரம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு – ஆட்சியர் தகவல்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டு ராபி பருவ தோட்டக்கலை பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி வெங்காயம், கொத்தமல்லி பயிர்களுக்கு 17.01.2025, வாழை பயிருக்கு 28.02.2025, மிளகாய் பயிருக்கு 31.01.2025 வரை காப்பீடு பிரீமியம் தொகை செலுத்தி பதிவு செய்து பயன் பெறலாம் என ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News October 20, 2024

தேவர் குருபூஜை: விதிமீறல் நடவடிக்கை எடுக்க தனிப்படை

image

தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு கமுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் டிஎஸ்பி இளஞ்செழியன் கூறியதவது; அக்.30ல் தேவர் ஜெயந்தி குருபூஜை, அரசு விழாக்களில் போலீஸ் அறிவிப்புகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அச்சுறுத்தும் வகையில் டூவிலரில் வருபவர்களை பிடித்து வழக்குப்பதிந்து வாகனங்களை பறிமுதல் செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

News October 19, 2024

மண்டபம் ரயில் நிலைய பயணிகள் நலக்குழு ஆலோசனை கூட்டம்

image

தெற்கு ரயில்வே சார்பில் மண்டபம் ரயில் நிலைய பயணிகள் நலக்குழு ஆலோசனை கூட்டம் இன்று (அக்.19)நடைபெற்றது. இதில் பயணச்சீட்டு முன்பதிவு வசதி வேண்டும், ரயில்வே நிலைய முகப்பை தேசிய நெடுஞ்சாலை பக்கமாக மாற்றிட வேண்டும். பயணிகள் நடந்து செல்ல நடைமேடை அமைத்திட வேண்டும். அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும், அடிப்படை வசதிகள் மேம்படுத்திட வேண்டும் என மண்டபம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

News October 19, 2024

ரூ.28 கோடிக்கு கருப்பட்டி உற்பத்தி

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் (அக்.19)இந்த ஆண்டு 1300 டன் கருப்பட்டி ரூ.28 கோடி மதிப்புக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கருப்பட்டியை அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்தால் பனைத் தொழிலாளர் வாழ்வாதாரம் மேம்படும் என ராமநாதபுரம் மாவட்ட பனைத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் 2018 கணக்கின்படி சுமார் 2.50 கோடி பன மரங்கள் உள்ளதாகவும், இராமநாதபுரத்தில் 15 லட்சம் பண மரங்கள் உள்ளன.

News October 19, 2024

இலங்கையில் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சென்னை வருகை

image

இராமநாதபுரம், இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த (செப்.28) அன்று மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களின் காவல் (அக்.10) நிறைவடைந்த நிலையில் அபதாரம் விதித்து விடுதலை செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று(அக்.18) சென்னை விமான நிலையம் வருகை தந்தனர். அவர்களை இராமேஸ்வரம் மீனவர்கள் சங்க தலைவர்கள் வரவேற்றனர்.

News October 18, 2024

ராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். இந்நிலையில் இன்று (அக்.18) மாதாந்திர குறைதீர் கூட்டமானது ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் விவசாயிகளிடம் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து மனுக்களை அளித்துச் சென்றனர்.

News October 18, 2024

ராமநாதபுரம்: மாற்றுதிறன் குழந்தைகளுக்கான முகாம்

image

ராமநாதபுரம் தொண்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறன் கொண்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் அளவீட்டு முகாம் இன்று(அக்.18) நடைபெற்றது. இதில் முட நீக்கியல் மனநலம் காது மூக்கு தொண்டை கண் மருத்துவர்கள் மாணவர்களுக்கு பரிசோதனை செய்து உபகரணங்கள் தேவை குறித்து வழிகாட்டினர். 78 மாணவர் மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

News October 18, 2024

ராம்நாட்டில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

image

ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், முதுகலை பட்டம் பயின்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள் தங்களது அசல் மற்றும் ஜெராக்ஸ் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News October 17, 2024

ராம்நாட்டில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

image

ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை காலை 10 மணி அளவில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், முதுகலை பட்டம் பயின்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள் தங்களது அசல் மற்றும் ஜெராக்ஸ் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அவர்கள் தெரிவித்துள்ளார்.