Ramanathapuram

News May 1, 2024

ஸ்தானிகர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

image

திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மாயமானது. இது தொடர்பாக கோவில் ஸ்தானிகர் சீனிவாச ஐயங்கார் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் சீனிவாச ஐயங்கார் மாவட்ட கோர்ட்டில் 2வது முறையாக முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணை நேற்று வந்த போது நீதிபதி குமரகுரு முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

News May 1, 2024

பிரபல நடிகர் மீதான மோசடி வழக்கு ஒத்திவைப்பு

image

தேவிபட்டினம் முனியசாமி என்பவரிடம் அவரின் தொழிலை மேம்படுத்த ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆவண செலவாக ரூ.14 லட்சம் வாங்கினாராம். கடன் வாங்கி தராமல் தான் வாங்கிய பணத்திற்காக போலி செக் கொடுத்து ஏமாற்றியதாக ராமநாதபுரம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு நேற்று பவர்ஸ்டார் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி வழக்கினை வரும் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

News April 30, 2024

பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சிறை

image

மண்டபம் குஞ்சார்வலசையை சேர்ந்தவர் ராஜேஷ் (42). ராமேஸ்வரம் கிளை அரசு போக்குவரத்து கழக மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மண்டபம் போலீசார் ராஜேஷை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி கோபிநாத் மேற்கண்ட ராஜேஷுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

News April 30, 2024

ராமநாதபுரத்தில் கோடைகால பயிற்சி முகாம்: கலெக்டர்

image

2024ஆம் ஆண்டிற்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ராமநாதபுரத்தில் வரும் மே 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ரூ.300 கட்டணத்தில்
தடகளம், ஹாக்கி, டென்னிஸ், இறகுப்பந்து, ஜுடோ ஆகிய பயிற்சி அளிக்கப்படும். 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்க மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 30, 2024

சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமையில் சாலைப் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. விபத்து பகுதிகளை கண்டறிந்து விழிப்புணர்வு பலகை வைக்க அறிவுறுத்தினார். பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர், உதவி எஸ்பி சிவராமன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக் முஹமது உடன் உள்ளனர்.

News April 30, 2024

ஆஸ்பத்திரியில் குழந்தை இறந்ததால் போராட்டம்

image

கடலாடி ராசிகுளம் பகுதியை சேர்ந்தவர் கனகவல்லி (24). கர்ப்பிணியான இவருக்கு 2 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. இராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று முன்தினம் இரவு ஆண் குழந்தை பிறந்த நிலையில் நேற்று திடீரென இறந்தது. சிகிச்சை குறைபாடு எனக்கூறி உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் உடலை பெற்று சென்றனர்.

News April 30, 2024

ராம்நாடு: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News April 29, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

image

இராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில், பாராளுமன்ற தேர்தலில் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. CCTV கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எஸ்.பி சந்தீஷ், பொதுபணித்துறை பொறியாளர் குருதிவேல்மாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.

News April 29, 2024

நீதித்துறையில் வேலை வாய்ப்பு

image

ராமநாதபுரம் மாவட்ட நீதித்துறையில் 39 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 28, 2024

தீ விபத்தில் குடிசை இழந்த பெண்ணுக்கு நிவாரணம்

image

மண்டபம் முகாம் உமையாள்புரத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரி. இவரது குடிசை வீட்டில் நேற்று நள்ளிரவு மண்ணெண்ணெய் விளக்கு கவிழ்ந்து தீப்பிடித்தது. இதில் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்த தகவலறிந்த மண்டபம் பேரூராட்சித் தலைவர் ராஜா, முனீஸ்வரிக்கு நிவாரணத் தொகை வழங்கினார். கவுன்சிலர்கள் சம்பத் ராஜா, கலாவதி ஆகியோர் உடனிருந்தனர்.

error: Content is protected !!