India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், இந்திய அரசு மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வண்ணம் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் நவாஸ்கனி எம்பி இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முதல் மதுரை பயணிகள் ரயில்கள் பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஸ்டேஷன்களில் அரை மணி நேரம் வரை காத்திருப்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். பரமக்குடியில் இருந்து இரு மார்க்கத்திலும் தினமும் 1000 பேர் வரை பயணிக்கின்றனர். இரு மார்க்கத்திலும் நடைபெறும் வேலைகளால் அனைத்து ரயில்களும் 10 முதல் 30 நிமிடங்கள் வரை நிறுத்த வேண்டியதுள்ளது.இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் சுபாஷ் சீனிவாசன் தன் வேலை நேரம் போக ஓய்வு நேரத்தில் சாலையோரங்களில் உள்ள மரங்களில் விளம்பர பலகை வைப்பதற்கு அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை கடந்த 2017 முதல் அப்புறப்படுத்தி வருகிறார். தற்போது மரங்களில் ஆணிகளை அடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.
தேவிபட்டினம் முனியசாமி என்பவரிடம் தொழிலை மேம்படுத்த ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆவண செலவாக ரூ.14 லட்சம் வாங்கியுள்ளார். கடன் வாங்கி தராமல் தான் வாங்கிய பணத்திற்காக போலி செக் கொடுத்து ஏமாற்றியதாக ராமநாதபுரம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு நேற்று பவர்ஸ்டார் ஆஜராகவில்லை. இதனால், நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு வரும் 3ஆம் தேதி சென்னையில் இருந்தும் பிற இடங்களிலிருந்தும் இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சென்னை ,சேலம், கோயம்புத்தூர், பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து 3ஆம் தேதி இராமேஸ்வரத்திற்கும், 4ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரமக்குடியில் வியாபாரிகள் சங்கத்தின் 51ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று ஆயிரவைசிய சபை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். வியாபாரி சங்கத் தலைவர் ராசி என்போஸ் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு வியாபாரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் என்பவரின் மகன் ஜெயசாந்த் (7). நேற்று மாலை அப்பகுதியில் உள்ள கண்மாயில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஜெயசாந்த் உடலை மீட்டனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர.
மண்டபம் மரைன் போலீசார்
மண்டபம் வடக்கு கடற்கரையில் நேற்றிரவு திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, இலங்கைக்கு கடத்த பதுக்கிய 180 கிலோ கடல் அட்டை, 650 கிலோ இஞ்சி, 400 கிலோ சமையல் மஞ்சள் என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடாஃபி என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பறிமுதல் செய்த பொருட்களை மண்டபம் சுங்கத்துறை, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 497 விசைப்படகுகள் நேற்று காலை மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று தொழிலுக்கு சென்றனர். இதில் 2 படகுகளைச் சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை இன்று அதிகாலை சிறை பிடித்தது. இந்த மீனவர் 9 பேருக்கும் ஆக 6 வரை சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இராமநாதபுரம் மாவட்டம், கூட்டாம்புளி ஊராட்சியில் உள்ள செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (23.07.2024) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் கல்லூரி சந்தை (College Bazar) கண்காட்சி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கலந்து கொண்டு கல்லூரி சந்தையை திறந்து வைத்து பார்வையிட்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
Sorry, no posts matched your criteria.