Ramanathapuram

News July 27, 2024

பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா 

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று 28 பழங்குடியின குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்ட வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பரமக்குடி வைகையாற்றுக்குள் வசிக்கும் 13 குடும்பங்களுக்கும், லீலாவாதி நகரில் வீட்டுமனையற்ற 15 குடும்பத்திற்கும் தலா 3 செண்ட் வீதம் இலவச வீட்டு மனை பட்டாக்களை சார் ஆட்சியர் அபிலாக் வழங்கினார். 

News July 27, 2024

ராமநாதபுரம் அருகே இருவர் கைது

image

ராமநாதபுரம் சக்கரக்கோட்டை முனீஸ்வரர் கோவில் அருகே நகர் போலீஸ் எஸ்.ஐ சரவணன் தலைமையிலான பாேலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்பகுதியில் உள்ள புதர் பகுதியில் நின்ற ராமநாதபுரம் யானைக்கல் வீதி ஹரிஹரசுதன்( 20), லெட்சுமிபுரம் சுசீந்திரன் (23) ஆகியோரை பிடித்து விசாரித்த போது போதை மாத்திரை விற்பனை செய்வது தெரியவந்தது. அவர்களிடமிருந்த ரூ,4 ஆயிரம் மதிப்பிலான மாத்திரைகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

News July 27, 2024

ராம்நாடு: இலங்கை மீனவர்கள் விடுதலை

image

தூத்துக்குடி கடலோர காவல்படையினர் கடந்த மே மாதம் எல்லை தாண்டி வந்த இலங்கை படகை பறிமுதல் செய்து மீனவர்கள் 7 பேரை கைது செய்தனர். ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், அரசின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி கலெக்டர் பரிந்துரையின் பேரில் 7 பேரையும் ராமநாதபுரம் நீதிபதி மோகன்ராம் நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டார்.

News July 27, 2024

சுதந்திர தின கொண்டாட்டம்

image

ராமநாதபுரத்தில் சுதந்திர தின விழா தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். சுதந்திர தின விழாவில் தியாகிகள் கவுரவிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் பணிகளை திட்டமிட்டு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என அலுவலர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.

News July 26, 2024

காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்

image

மத்திய நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை (27/7/24) மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ராமநாதபுரம் மத்திய தபால் நிலையம் அருகே நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கருமாணிக்கம் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

News July 26, 2024

மீனவர்கள் முதலமைச்சருடன் சந்திப்பு

image

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் இன்று காலை ராமநாதபுரம் எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை முகாம் அலுவலகத்தில் சந்தித்து இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விரைந்து மீட்க வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தனர்.

News July 26, 2024

முதல்வருடன் ராமநாதபுரம் எம்எல்ஏ சந்திப்பு

image

ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் இன்று முதல்வரை சந்தித்தார். அப்போது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மீட்க கோரினார். அதன்பின்னர், மீனவ பிரதிநிதிகளை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தார். மீனவர்களின் கோரிக்கையை பெற்றுக் கொண்ட முதல்வர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

News July 26, 2024

ராமநாதபுரம் கலெக்டருக்கு எம்எல்ஏ வாழ்த்து

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற சிம்ரன்ஜித்சிங் காலோன் என்பவரே நேற்று (ஜுலை 25) இரவு ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

News July 26, 2024

ராமநாதபுரம்: திமுக சார்பில் ஆர்பாட்டம்

image

ராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து வருகிற சனிக்கிழமை ஜூலை 27 அன்று காலை 10 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் அறிவித்துள்ளார். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

News July 26, 2024

அக்டோபர் முதல் ராமேஸ்வரம் வரை ரயில்

image

ராமேஸ்வரத்தில் புதிதாக அமைக்கப்படும் பாம்பன் பால பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அக்டோபர் முதல் ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரயில்வே பணிகளுக்கு 6 ஆயிரத்து 362 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

error: Content is protected !!