Ramanathapuram

News May 9, 2024

சர்வதேச கராத்தே: வென்ற ராம்நாடு மாணவன்

image

மலேசியா சிலாங்கூர் மாகாணத்தில் நடந்த இன்டர்நேஷனல் கராத்தே போட்டியில் கோஜுரியோ வேர்ல்ட் கராத்தே டூ சோப்புக்காய் சார்பாக இந்திய தலைமை பயிற்சியாளர் டாக்டர் சுரேஷ்குமார் தலைமையில் வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் நரிப்பையூர் மாணவர் ஜெகதீஷ் பிரதீப் தங்கம், வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். மாணவனை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சென்சாய் முத்துராஜா, பொதுமக்கள் பாராட்டினர்.

News May 8, 2024

கடும் வெயிலின் தாக்கத்தால் ஒருவர் உயிரிழப்பு

image

ஆர்.எஸ்.மடை கிராமத்தில் உள்ள தோட்டத்தில் வெள்ளரி பறிப்பதற்காக ஆட்டோ டிரைவர் பாண்டி இன்று (மே 8) சென்றபோது கடும் வெயில் சுட்டெரித்த நிலையில் அதிக வெப்பத்தின் காரணமாக தோட்டத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது பரிசோதித்த மருத்துவர் வரும் வழியில் பாண்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News May 8, 2024

மண்டபம் படகுகள் கள ஆய்வு: அதிகாரி தகவல்

image

மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளுக்கு மே 31, நாட்டுப்படகுகளுக்கு
ஜூன் 11ல் நேரடி ஆய்வு செய்யப்படவுள்ளது. இந்த 2 நாட்களில் ஆய்வுக் குழுவினரிடம் விசைப்படகு, நாட்டுப்படகு உரிமையாளர்கள் அனைத்து ஆவணங்களையும் தவறாமல் நேரடியாக காண்பிக்க வேண்டும் என மண்டபம் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

News May 8, 2024

ராமநாதபுரம் லட்சுமண தீர்த்தம்

image

ராமநாதசுவாமி கோயிலிலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது லட்சுமண தீர்த்தம். இதனை சுற்றி சீதா தீர்த்தம், பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோவில், தண்ணீரில் கல் மிதக்கும் இடங்கள் அமைந்துள்ளன. ராமநாதபுரத்தில் 64 தீர்த்த குளங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. புராணக் கதைகளைத் தழுவிய இத்தலத்தில் இலட்சுமண தீர்த்தம் இலட்சுமனேஸ்வரர் பெயரில் சிவன் கோவில் ஒன்று அமைந்துள்ளது.

News May 8, 2024

மலேசியாவில் இறந்தவரின் உடலை கொண்டு வந்த கலெக்டர்

image

ராமநாதபுரம் இளமனூரை சேர்ந்தவர் கார்த்திகைராஜ் (56). மலேசியாவில் வேலை பார்த்து வந்தவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது மனைவி சற்குணம் கடந்த 30ஆம் தேதி கலெக்டர் விஷ்ணு சந்திரனை சந்தித்து கார்த்திகைராஜ் உடலை கொண்டுவர கோரி மனு அளித்தார். கலெக்டர் துரித நடவடிக்கை எடுத்து ஒரு வாரத்திற்குள் மலேசியாவில் இருந்து கார்த்திகைராஜின் உடல் கொண்டு வரப்பட்டுள்ளது.

News May 8, 2024

ராமநாதபுரம்: ‘கல்லூரி கனவு 2024’ தொடக்கம்

image

12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு 12ம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அதன்படி, ராமநாதபுரத்தில் மே 13ம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News May 8, 2024

ராம்நாடு: முதல்வரை சந்தித்து அமைச்சர் வாழ்த்து

image

தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து 2021 மே 7ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நேற்றுடன் (மே 7) மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி அமைச்சர் ராஜகண்ணப்பன் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

News May 7, 2024

திறந்தவெளி உணவகங்களில் ஆய்வு

image

ஏர்வாடி தர்ஹா பகுதியில் உள்ள ஓட்டல்கள், திறந்த வெளி உணவகங்களில் தயாராகும் உணவுகளில் சுவையூட்ட நிறமிகள் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதன்படி உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், ஏர்வாடி தர்ஹா பகுதியில் உள்ள உணவகங்களில் இன்று ஆய்வு செய்தார். 12 கடைகளில் நிறமி பயன்படுத்திய உணவு மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பினார். கடை உரிமையாளர் 4 பேருக்கு நோட்டீஸ் வழங்கி 2 பேருக்கு ரூ.1000 அபராதம் விதித்தார்.

News May 7, 2024

தொழில் முனைவோர் விருது: ராம்நாடு கலெக்டர் தகவல்

image

மாநில அளவில் சிறந்த தரம், ஏற்றுமதி, சிறந்த தொழில் முனைவோருக்கான விருது மற்றும் மாவட்ட அளவில் சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கப்பட உள்ளது. விருது பெற விரும்பும் தொழில் நிறுவனங்கள் பேம் டி.என்., (FaMeTN) awards.fametn.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்க 20.5.2024 கடைசி நாள் ஆகும். தகுதியான தொழில் முனைவோர் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் இன்று தெரிவித்துள்ளார்.

News May 7, 2024

பரமக்குடி ஒன்றியத்தில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு

image

பரமக்குடி ஒன்றியம் அரியனேந்தல் கிராமத்தில் காவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குழாய் அமைக்கும் பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தொழில்கள், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அய்யப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

error: Content is protected !!